காஷ்மீரில் தீவிரவாதியாகி சில வாரங்களே ஆன முன்னாள் கால்பந்து வீரர் ராணுவத்திடம் சரண்
தீவிரவாதியாக மாறிய கால்பந்துவீரர் காஷ்மீரில் ராணுவத்தினரிடம் சரணடைந்தார்.
காஷ்மீர் : காஷ்மீரில் தீவிரவாதியாக மாறிய கால்பந்துவீரர் மனம் திருந்தி ராணுவத்தினரிடம் சரணடைந்தார்.
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மஜித் இர்ஷத் கான். இவர் அந்த மாவட்டத்தின் உள்ளூர் கால்பந்து அணியின் பிரபல வீரர். ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்திலும் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து காணாமல் போனார். இர்ஷத் கான் தன் பெயரை அபு இஸ்மாயில் என்று மாற்றிக்கொண்டு லக்ஷர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தில் இணைந்துவிட்டதாக அவர் துப்பாக்கி ஏந்தியடி இருக்கும் புகைப்படத்தோடு அந்த இயக்கம் செய்தி வெளியிட்டது.
இதனால் அவரது பெற்றோர் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் இர்ஷத் கான் அனந்த்நாக் ராணுவ முகாமில் சரணடைந்தாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் தற்போது ராணுவ விசாரணையில் இருப்பதாகவும், விரைவில் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ராணுவ அதிகாரிகள், இர்ஷத் சில நாட்களே தீவிரவாதிகளோடு இருந்துள்ளார். அதனால் அவருக்கு தண்டனை எதுவும் இல்லை.
மேலும் தீவிரவாதத்தில் இருந்து திரும்ப நினைக்கும் பலருக்கும் இவர் ஒரு முன்மாதிரியாக இருக்கவேண்டும். அதனாலேயே இவரை விடுதலை செய்ய இருக்கிறோம். இதுபோன்ற அப்பாவி இளைஞர்கள் தேவையில்லாமல் குண்டடிப்பட்டு சாவதில் எங்களுக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்து உள்ளனர்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications