ஆளில்லாத போலீஸ் பூத்.. உள்ளே இருந்து வந்த முனகல் சத்தம்.. எட்டி பார்த்தால்.. அட கொடுமையே!

இளம்பெண்ணை பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர்

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: ஆளில்லா போலீஸ் பூத்துக்குள் இருந்து வந்த முனகல் சத்தம் மிகப்பெரிய விபரீதத்தில் கொண்டு போய்விட்டுவிட்டது!

குஜராத்தின் மோர்பியில் உள்ள ஒரு நகரத்தில் ஒரு போலீஸ் பூத் இருக்கிறது.. ஆனால் கொஞ்ச நாளாகவே இரவு நேரங்களில் அந்த பூத்தை யாருமே பயன்படுத்துவதில்லை.

 young woman raped by two near Gujarat

இந்நிலையில், சம்பவத்தன்று இரவு அந்த போலீஸ் பூத்தில் இருந்து ஒரு பெண்ணின் முனகல் சத்தம் கேட்டது.. அந்த நேரம் பார்த்து ஹரேஷ் ஜாதவ் என்பவர் தனது நண்பர்களுடன் அந்த பக்கமாக சென்று கொண்டிருந்தார்..

இரவு நேரம் என்பதால், பெண்ணின் முனகல் தெளிவாக கேட்டதால் ஹரேஷ் ஜாதவ் அதிர்ச்சியுற்றார்.. உடனே போலீஸ் பூத்திலிருந்துதான் சத்தம் வருகிறது என்பதை அறிந்து அங்கு சென்று பார்த்தார். அந்த பூத்தில், மஹேந்திர ரதோத் என்பவர் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்து கொண்டிருந்தார்.

அதை கண்டு உடனே ஆவேசமாகி குற்ற செயலை தடுத்து நிறுத்துவார் என்று பார்த்தால், தன்னுடைய செல்போனை எடுத்து, பலாத்காரம் செய்வதை வீடியோ எடுத்தார். பெண்ணின் கதறலையும் மீறி வீடியோ எடுப்பதிலேயே மும்முரமாக இருந்தார். பிறகு, அதை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டார்.. அந்த வீடியோ அடுத்த கொஞ்ச நேரத்திலேயே வைரலானது.

பலரும் வீடியோவை பார்த்த நிலையில், அதே போலீஸ் பூத்தினை பயன்படுத்தும் போலீஸ்காரர்களும் இதை பார்த்து அதிர்ந்தனர். உடனடியாக விசாரணையில் இறங்கினர்.. அந்த வீடியோவை அப்லோடு செய்தவர் யார் என்பதை கண்டறிந்தனர். அப்போது ஹரேஷ் ஜாதவ் என்ற 28 வயது இளைஞரை சுற்றி வளைத்து பிடித்தனர்..

அந்த பெண்ணை பலாத்காரம் செய்த மஹேந்திர ரதோத் என்பவரை கைது செய்தனர்.. அவரிடம் விசாரணை நடத்தியபோதுதான், கணவரை பிரிந்து வாழும் அந்த பெண், அந்த பகுதியில் பிச்சை எடுப்பவராம்.. அவரைதான் மஹேந்திர ரதோத் சீரழித்தது தெரியவந்தது.. இப்போது பலாத்காரம் செய்தவர், அதை வீடியோ எடுத்தவர் என 2 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+