For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இளமை, கல்வி & திறமை.. ஒடிசாவை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மாற்றி அமைக்கும் நவீன் பட்நாயக்

Google Oneindia Tamil News

புவனேஸ்வர், 14 மார்ச் 2022: ஒடிசாவின் வரலாற்றில் முதல் முறையாக, அநேகமாக நாட்டிலேயே முதல்முறையாக, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே கட்சி ஜில்லா பரிஷத் எனப்படும் உள்ளாட்சி அமைப்புகளைக் கைப்பற்றி உள்ளது. இது பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சிக்குக் கிடைத்த வரலாறு காணாத வெற்றியாகும். மேலும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் வலுவான தலைமை மீது மக்கள் எந்தளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதையே இது காட்டுகிறது.

இதில் முக்கிய முடிவாக அனைத்து மாவட்டங்களின் ஜில்லா பரிஷத் தலைவராகப் படித்த மற்றும் திறமையான தொண்டர்களை நவீன் பட்நாயக் தேர்ந்தெடுத்துள்ளார். அவர்களைத் தலைமைப் பதவிகளுக்குக் கொண்டு வரும் நீண்ட நோக்கத்துடன் அவர்களை நவீன் பட்நாயக் தேர்ந்தெடுத்துள்ளார்.

Young, education and talent: How Naveen Patnaik is attempting to rewrite prerequisites for succeeding electorally in Odisha

23 வயதான சரஸ்வர்த்தி மஜி, மிகவும் இளம் வயது ஜில்ல பரிஷத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிஎஸ்சி பட்டதாரியான இவர், இனி ராயகட மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்துச் செல்வார்.

தொலைதூரப் பகுதிகளின் வளர்ச்சி குறித்துத் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் நவீன் பட்நாயக், மல்கங்கிரியில் ஜில்லா பரிஷத் தலைவராகச் சமரி தாங்குல் என்பவை தேர்ந்தெடுத்துள்ளார். 26 வயதாகும் சமரி தாங்குல் +2 வரை படித்துள்ளார். இவரைப் போலவே சரஸ்வதி மாஜியும் தொலை தூர கிராமங்களில் ஒன்றான காசிபூர் பகுதியைச் சேர்ந்தவர். அதேபோல மற்றொரு தலைவரான குமுதினி நாயக் சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள பாம்ரா பகுதியைச் சேர்ந்தவர். இந்த இளம் தலைவர்களின் தலைமையில் இந்த பகுதிகள் வரும் காலத்தில் சிறப்பான வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும் ஒடிசா.. அசத்தும் முதல்வர் நவீன் பட்நாயக்! கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும் ஒடிசா.. அசத்தும் முதல்வர் நவீன் பட்நாயக்!

மொத்தம் உள்ள 30 மாவட்டங்களில் 15 மாவட்டங்களின் ஜில்லா பரிஷத் தலைவர்கள் (50%) 40 வயதுக்குக் குறைவானவர்கள் ஆவர், 30இல் 23 மாவட்ட (76%) தலைவர்கள் 50 வயதுக்குட்பட்டவர்கள். அனைத்து ஜில்லா பரிஷத் தலைவர்களின் சராசரி வயது 41 ஆண்டுகள் மட்டுமே ஆகும்.

அதேபோல இத்தேர்தலில் மற்றொரு முக்கிய அம்சமாகத் தேர்வானவர்களின் கல்வித் தகுதி. இதில் 18 ஜில்லா பரிஷத் தலைவர்கள் பட்டப்படிப்பை முடித்துள்ளனர். 30 மாவட்ட ஜில்லா பரிஷத் தலைவர்களில் 26 பேர் குறைந்தபட்சம் +2 நிலைக் கல்வியை முடித்துள்ளனர். படித்த குற்ற வழக்குகள் எதுவும் இல்லாமல் இருக்கும் நபர்களைச் சிறப்பான வளர்ச்சி பணிகளுக்கு வித்திடும் வகையில் மாவட்ட தலைமை பொறுப்பிற்கு நவீன் பட்நாயக் தேர்ந்தெடுத்துள்ளார்.

பெண்கள் தலைமையின் மீதும், பெண்கள் அதிகாரம் பெறுவதிலும் நம்பிக்கை வைத்து, நவீன் பட்நாயக் 21 பெண்களை ஜில்லா பரிஷத் தலைவர்களாகத் தேர்வு செய்துள்ளார். பெண்களுக்கான இட ஒதுக்கீடு 50% என்று சட்டப்படி இருந்தாலும், மொத்த இடங்களில் 70%இல் அவர் பெண்களை நியமித்துள்ளார். ஒடிசாவில் இத்தனை மாவட்டங்களுக்குப் பெண்கள் தலைமை தாங்குவது இதுவே முதல் முறையாகும்.

பெரிய மாவட்டங்களான மயூர்பஞ்ச், கஞ்சம், கியோஞ்சர், சுந்தர்கர், போலங்கிர், சம்பல்பூர் மற்றும் ஒருங்கிணைந்த கோராபுட் மாவட்டங்களில் (நவ்ரங்பூர் தவிர) பெண்களே ஜில்லா பரிஷத் தலைவர்களாக உள்ளனர்.

இட ஒதுக்கீடு இல்லாத 18 இடங்களில் (பெண்கள் உட்பட) ஒபிசி பிரிவைச் சேர்ந்த 12 பேர் (67%) ஜில்லா பரிஷத் தலைவராக ஆக்கப்பட்டுள்ளனர். ஓபிசி வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பது தொடர்பாக முதல்வர் நவீன் பட்நாயக்கின் உறுதிமொழியை இதன் மூலம் அவர் நிறைவேற்றியுள்ளார். நவீன் பட்நாயக் தனது சொந்த மாவட்டமான கஞ்சத்தில், ஓபிசி வகுப்பைச் சேர்ந்த பெண் ஒருவரை ஜில்லா பரிஷயயத் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளார்.

English summary
For the first time in the history of Odisha, and probably across the country, a single party has formed Zilla Parishad (ZP) in all the districts in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X