ஜாய்ரா பாலியல் புகார்... எனது கணவர் அப்பாவி... தவறாக புரிந்து கொண்டீர்கள்... சச்தேவின் மனைவி பரபர
தங்கல் நடிகை ஜாய்ராவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட கணவர் விகாஷ் சச்தேவ் அப்பாவி என்று அவரது மனைவி பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video

மும்பை : விமானத்தில் தங்கல் நடிகை ஜாய்ரா வாசிமுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட விகாஷ் சச்தேவ் ஒரு அப்பாவி என்று அவரது மனைவி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
ஆமீர் கான் நடித்த தங்கல் படத்தில் சிறு வயது கீதா போகாட்டாக நடித்தவர் ஸ்ரீநகரை சேர்ந்த ஜாய்ரா வாசிம்(17). இதையடுத்து அவர் சீக்ரெட் சூப்பர் ஸ்டார் என்ற படத்திலும் நடித்தார்.

இவர் கடந்த சனிக்கிழமை விமானம் மூலம் டெல்லியில் இருந்து மும்பை சென்றுள்ளார். அதே விமானத்தில் அவரது இருக்கைக்கு பின்புறம் விகாஷ் சச்தேவ் (39) என்பவர் பயணம் செய்தார். அவர் ஜாய்ராவின் பின்பகுதியில் அவரது காலால் உரசியதாக ஜாய்ரா கண்ணீர் பேட்டி அளித்தார்.
இதுகுறித்து போலீஸாரிடம் ஜாய்ரா புகார் கொடுத்தார். அந்த நபரை போட்டோவும் எடுத்திருந்தார். ஆனால் போட்டோவில் அவரது உருவம் கிளியராக இல்லை. எனினும் ஜாய்ராவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது விகாஷ்தான் என்று போலீஸார் கண்டறிந்தனர்.
இதையடுத்து ஜாய்ராவுக்கு 17 வயதே ஆவதால் விகாஷை கைது செய்து அவர் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கணவர் மீதான இந்த புகார் குறித்து அவரது மனைவி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், எனது கணவர் அப்பாவி. பாலியல் தொல்லை கொடுக்கும் எண்ணம் அவருக்கு இல்லை. எங்கள் குடும்பத்தில் ஒருவர் உயிரிழந்துவிட்டார், அவரது மறைவுக்கு சென்றதால் விகாஷுக்கு 24 மணி நேரமாக தூக்கம் இல்லை.
விமான பணியாளரிடமே தான் தூங்க வேண்டும், தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் அவரது கால் தெரியாமல் ஜாய்ரா மீது பட்டிருக்கும். ஆனால் அதில் பாலியல் தொல்லை தரும் எண்ணத்தோடு இருந்திருக்காது.
எனினும் ஜாய்ரா உடனடியாக அதுகுறித்து எந்த வித ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. ஆனால் அவர் ஏனோ இதுபோன்ற குற்றச்சாட்டுகளை என் கணவர் மீது வைக்கிறார் என்று தெரியவில்லை. ஒரு வேளை விகாஷை அவர் தவறாக புரிந்து கொண்டாரோ என்னவோ.
அவர் அதுபோன்ற தவறான காரியங்களில் ஒருபோதும் ஈடுபட மாட்டார். எங்களுக்கு நீதி வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications