For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாதிக்க வயசு என்ன வேண்டி இருக்கு... 100 வயதில் ஓடி தங்கம் வென்று அசத்திய இந்திய மூதாட்டி

Google Oneindia Tamil News

வான்கூவர்: மாஸ்டர் கேம்ஸ் எனப்படும் மூத்தவர்களுக்காக நடத்தப்படும் விளையாட்டுப் போட்டியில், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட 100 வயது இந்திய மூதாட்டி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

கனடா வான்கூவரில் நேற்று மாஸ்டர் கேம்ஸ் போட்டி நடைபெற்றது. இதில் சண்டிகர் மாநிலத்தைச் சேர்ந்த மன் கவுர் என்ற 100 வயது மூதாட்டி, 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டார். பந்தயத்தில் அவர் 1 நிமிடம் 21 வினாடிகளில் ஓடி இலக்கை அடைந்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

100-year-old Indian runner inspires at American Masters Games

இதுமட்டுமல்லாமல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளிலும் மன் கவுர் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். மேலும் இந்தப் போட்டியில் கலந்து கொண்ட ஒரே பெண் இவர்தான் என்ற பெருமையையும் தட்டிச் சென்றுள்ளார்.

மன் கவுரின் சாதனைக்கு அவரது மகன் குருதேவ் சிங் ஊக்கசக்தியாக விளங்கி வருகிறார். இவரும் மாஸ்டர் கேம்ஸ்சில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

100-year-old Indian runner inspires at American Masters Games

கடந்த 7 ஆண்டுகளாக உலகம் முழுவதும் நடைபெற்ற மாஸ்டர் கேம்ஸ்சில் கலந்து கொண்டு 20 பதக்கங்களை மன் கவுர் பெற்றுள்ளார் என்று அவரது மகன் குருதேவ் சிங் தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் கேம்ஸ் என்ற இந்த விளையாட்டு போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. 49 வயதைக் கடந்த யாரும் இந்தப் போட்டிகளில் பங்கேற்கலாம்.

English summary
Man Kaur from India needed almost a minute-and-a-half to cross the finish line in the 100-meter dash, but she still picked up a gold medal at the American Masters Games.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X