IMF, உலக வங்கியின் ஆதிக்கம் முடிவுக்கு வருகிறது! BRICS+ மூலம் முடிவுரை எழுதும் இந்தியா!
பெய்ஜிங்: உலக வங்கியும், சர்வதேச நிதியமும் (IMF) கடன் என்கிற பெயரில் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஓவராக தலையிடுகிறது. இந்த தலையீடலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வேலையை பிரிக்ஸ் அமைப்பு மூலம் இந்தியா முன்னெடுத்திருக்கிறது.
சமீபத்தில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டிருக்கிறது. அனைத்து உறுப்பு நாடுகளிடமும் ஒருமித்த கருத்து ஏற்பட்டால் பெரிய மாற்றம் உருவாகும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

பிரிக்ஸ் நாடுகளின் கூட்டம்:
கடந்த 24ம் தேதி பிராசிலியாவில் BRICS கொள்கை திட்டமிடல் கலந்துரையாடலின் 10வது கூட்டம் நடைபெற்றது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சகத்தின் கொள்கை திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சி பிரிவு பொதுச் செயலாளர் ரகுராம் பங்கேற்றிருந்தார். இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயம் பெரும் கவனம் பெற்றிருக்கிறது.
IMF, உலக வங்கிக்கு மாற்று:
பிரிக்ஸ் அமைப்பில் சமீபத்தில் சில நாடுகள் இணைந்திருக்கின்றன. அவற்றை இணைத்துக்கொண்டு வளர்ச்சி மற்றும் கொள்கை திட்டமிடல் பற்றிய வரையறையை வகுப்பது, வளர்ச்சிக்கு சாத்தியமான வழிகளை ஆய்வு செய்வது, IMF, உலக வங்கி போன்றவற்றிற்கு மாற்றை கொண்டுவருவது பற்றி பேசப்பட்டிருக்கிறது. BRICS நாடுகளின் உலக வர்த்தகம், நிதி நிலைத்தன்மை, மற்றும் தெளிவான பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பது பற்றியும் பேசப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு பட்டிருக்கும் கடன்:
இவை இந்தியாவுக்கு மிகப்பெரிய அளவில் பலன் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. உலக வங்கியிடமிருந்து நாம் பெறும் கடனுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. உதாரணமாக தமிழக அரசை எடுத்துக்கொள்வோம்.
1. தமிழ்நாடு நிலையான நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் (2015) - $400 மில்லியன்
2. தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்த திட்டம் (2019) - $287 மில்லியன்
3. தமிழ்நாடு கிராமப்புற மாற்றத் திட்டம் (2018) - $100 மில்லியன்
4. தமிழ்நாடு வீட்டுவசதி துறை வலுப்படுத்தல் திட்டம் I (2020) - $200 மில்லியன்
5. தமிழ்நாடு வீட்டுவசதி துறை வலுப்படுத்தல் திட்டம் II (2022) - $190 மில்லியன்
6. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோர பேரிடர் குறைப்பு திட்டம் (2013) - $236 மில்லியன்
7. சென்னை நகர கூட்டணி: நிலையான நகர்ப்புற சேவைகள் திட்டம் (2021) - $150 மில்லியன்
8. தமிழ்நாடு புரட்சிகர நகர்ப்புற வளர்ச்சி திட்டம் (2023) - $300 மில்லியன்
9. தமிழ்நாடு சாலைத் துறை திட்டம் (முதல் மற்றும் கூடுதல் நிதி) - $348 மில்லியன் (2003) + $50.7 மில்லியன் (2010)
10. தமிழ்நாடு சாலைத் துறை திட்டம் - II (2015) - $300 மில்லியன்
11. தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக பாதுகாப்பு திட்டம் (RIGHTS, 2022) - $162 மில்லியன்
12. தமிழ்நாடு வறுமை குறைப்பு திட்டம் (கூடுதல் நிதி, 2010) - $154 மில்லியன்
மானியத்தை வெட்டும் உலக வங்கி:
என கடன் வாங்கியிருக்கிறோம். இந்த கடன்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கிறது. இதில் வளர்ச்சிக் கொள்கை கடன்களுக்கு (Development Policy Financing - DPF) விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகள் பொதுத்துறையை காவு வாங்குவதாக இருக்கிறது. குறிப்பாக எரிபொருள், மின்சாரம் உள்ளிட்டவைக்கு வழங்கப்படும் மாணியங்களை நிறுத்த உலக வங்கி வலியுறுத்துகிறது. இது சமானிய மக்களுக்குதான் சிக்கலாக மாறுகிறது. உதாரணமாக பெட்ரோல் எனும் எரிபொருளுக்கு மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்கி வந்து, அது நிறுத்தப்பட்டால் இதன் விலை உயரும். உலக வங்கி மானியத்தை நிறுத்த வலியுறுத்துகிறது.
தனியார் துறையின் தலையீடு:
அதேபோல சில திறமையற்ற தனியார் நிறுவனங்களை அரசுடன் கோர்த்து விடும் வேலையையும் PPP (Public-Private Partnership) என்கிற பெயரில் உலக வங்கி செய்கிறது. தமிழ்நாடு சாலைத் துறை திட்டத்தில் உலக வங்கி கடன் வழங்கியபோது, சாலைகள் பராமரிப்பு மற்றும் மேம்படுத்துதலில் தனியார் பங்கேற்பது அவசியம் என்று கூறியது. இப்போது புரிகிறதா டோல்கேட்டுகள் ஏன் இருக்கின்றன என?
சென்னனையில் நீர் மற்றும் கழிவு மேலாண்மை சேவைகளுக்கு தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்ய 'சென்னை நகர கூட்டணி திட்டம்' காரணமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கான நிதியும் உலக வங்கிதான் வழங்கியது.
உலக வங்கிக்கு முடிவுரை:
ஆக உலக வங்கி தனது கடன் வலையில் விழவைத்துவிட்டு அங்கு தனியார் நிறுவனங்கள் செழித்து வளர வழி செய்கிறது. எனவேதான் உலக வங்கி மற்றும் ஐஎம்எஃப்-க்கு மாற்றை பிரிக்ஸ் நாடுகள் தேடி வருகின்றன. அந்த வகையில் பிராசிலியாவில் நடந்த கூட்டம் மிக முக்கிய கவனம் பெற்றிருக்கிறது. இந்தியா பிரிக்ஸ் நாடுகள் மூலமாக உலக வங்கிக்கும், ஐஎம்எஃப்க்-க்கும் மாற்றை தேடி வேண்டும் என்று பலரும் கூறுகின்றனர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மக்களே!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications