கொரோனாவை விரட்டியடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஸ்பெயினின் 113 வயது சபாஷ் பாட்டி
மாட்ரிட்: கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கிய ஸ்பெயினின் 113 வயது பாட்டி முழுமையாக குணமடைந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.
Recommended Video
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குழந்தைகளையும் முதியவர்களையும் குறிவைத்து கொல்கிறது. இதனால் கொரோனாவின் பிடியில் சிக்காமல் இருக்க முதியவர்கள் வீடுகளில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் கொரோனாவின் பிடியில் சிக்கிய முதியவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பால் மீண்டு வந்திருக்கின்றனர். இப்படி மீண்டு வந்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ஸ்பெயினின் 113 வயது பாட்டி Maria Branyas- மரியா பிரான்யாஸ்.
ஸ்பெயின் நாட்டின் அதிக வயதுடைய மூதாட்டிதான் மரியா பிரான்யாஸ். அமெரிக்காவை பிறப்பிடமாகக் கொண்டவர். 1907-ம் ஆண்டு மார்ச் 4-ந் தேதி அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் பிறந்தவர் மரியா பிரான்யாஸ். இவரது தந்தை ஸ்பெயினைச் சேர்ந்த பத்திரிகையாளர். முதலாவது உலகப் போரின் போது படகு மூலம் ஸ்பெயினில் தஞ்சமடைந்தார்.
1918-19களில் உலகையே உலுக்கிய ஸ்பானிஸ் ப்ளூ தாக்குதலில் இருந்தும் 1936- 39களில் நடைபெற்ற ஸ்பெயினின் உள்நாட்டு போரிலும் உயிர் தப்பியவர் மரியா பிரான்யாஸ். இவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கடந்த மாதம் உறுதி செய்யப்பட்டது.
இதனால் தனிமைப்படுத்தப்பட்ட மரியா பிரான்யாஸ், ஒரு மாதம் முழுமையாக ஓய்வில் இருந்தார். தற்போது மரியா பிரான்யாஸின் உடல்நிலையில் சீரான முன்னேற்றம் இருக்கிறது என அறிவித்திருக்கின்றனர் மருத்துவர்கள். கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கி மீண்டு வந்த மரியா பிரான்யாஸ் எனும் இந்த 113 வயது பாட்டிதான் உலகின் ஆச்சரிய டாப்பிக்குகளில் ஒருவராகவும் இருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications