ஷாக்.. மொத்தம் 545 டாக்டர்களாம்.. ரெண்டே வாரத்தில் தொற்றுக்கு பலி.. அதிர்ச்சியில் இந்தோனேஷியா
ஜகார்த்தா: மொத்தம் 545 டாக்டர்களாம்.. இந்தோனேஷியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
உலகம் முழுவதும் தொற்று அதிகமாக இருக்கிறது.. இதற்கு இந்தோனேசியாவும் விதிவிலக்கல்ல.. தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. குறிப்பாக டெல்டா வகை வைரஸ் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கும் பரவி வருகிறது.

இதன் மூலம் ஆசியாவில் கொரோனாவின் மையப்பகுதியாக இந்தோனேசியா உருமாறி இருக்கிறது.. இந்தோனேசியாவை பொறுத்தவரை கிராமப்பகுதிகளே அதிகமாக உள்ளது.. அதனால் போதுமான ஆஸ்பத்திரிகளோ, மருத்துவ கட்டமைப்புகளோ இல்லை..
இவர்களுக்கு தொற்று வந்தால் சிகிச்சை கிடைக்காமல் அப்படி அப்படியே இறந்துவிடும் கொடுமை நடந்து வருகிறது.. நேற்று முன்தினம் 44 ஆயிரத்து 721 பேரை தொற்று தாக்கி உள்ளது... இதில் 1,093 பேர் உயிரிழந்து உள்ளனர்...
இதில் கொடுமை என்னவென்றால், டாக்டர்களுக்கும் நர்ஸ்களுக்கும் தொற்று ஏற்பட்டுவிடுவதால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான டாக்டர்கள், நர்சுகள் இல்லை.. அதனால் அவர்களும் தொற்று பாதித்து உயிரிழந்து வருகிறார்கள்.. இப்படி கடந்த 2 வாரத்தில் மட்டுமே 114 டாக்டர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 545 டாக்டர்கள் உயிரிழந்துள்ளனர்... இதில் கடந்த வாரம்தான் அதிக அளவு டாக்டர்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது... இது அந்நாட்டு மக்களுக்கு பெருத்த கவலையை அளித்து வருகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications