12,000 ஆண்டுகள்.. எழுத்து, விவசாயத்திற்கு முன்னதாக நாட்காட்டியை பயன்படுத்திய மனிதர்கள்

Subscribe to Oneindia Tamil

அங்காரா: எழுத்து, விவசாயம் உள்ளிட்டவை தோன்றுவதற்கு முன்னரே மனிதர்களாகிய நாம் காலண்டரை பயன்படுத்தியிருக்கிறோம். இதற்கான ஆதாரங்கள் தற்போது கிடைக்க பெற்றிருக்கின்றன.

சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்னரே நாம் நாட்காட்டியை பயன்படுத்த தொடங்கிவிட்டோம் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

calendar World human

காலண்டர் எப்படி சாத்தியம்?

காலண்டரில் நம்பர்கள்தான் இருக்கும். ஆனால் எழுத்து தோன்றுவதற்கு முன்னரே எப்படி நம்மால் நாட்காட்டியை உருவாக்கியிருக்க முடியும்? என்று உங்களுக்கு சந்தேகம் எழலாம். எகிப்தில் இன்றும் பிரமாண்டமாக நிற்கும் பிரமிடுகள், மனிதர்கள் சக்கரம் கண்டுபிடிப்பதற்கு முன்னர் கட்டப்பட்டது என்பது எப்படி உண்மையோ, அதேபோலத்தான் எழுத்து கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர் காலண்டர் கண்டுபிடிக்கப்பட்டதும் உண்மை.

துல்லியமான அளவீடு

இதற்கான ஆதாரங்கள் துருக்கியில் உள்ளன. இங்குள்ள 'கோபெக்லி டெபே' எனும் பகுதியில் தொல்பொருள் ஆய்வு களஞ்சியம் இருக்கிறது. இங்கிருக்கும் தொல்பொருட்களை ஆய்வு செய்ததில் இந்த உண்மை தெரிய வந்திருக்கிறது. இப்பகுதியில் 'T' வடிவத்தில் தூண்கள் இருக்கின்றன. இந்த தூண்களில் 'V' வடிவத்தில் சிற்பங்கள் இருக்கின்றன. மொத்தம் 365 சிற்பங்கள் உள்ளன. ஒரு ஆண்டின் மொத்த நாட்களின் எண்ணிக்கையும் இதுதான். எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், மனிதர்கள் 12,000 ஆண்டுகளுக்கு முன்னரே நாட்காட்டியை கண்டுபிடித்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

சங்கராந்தியும் குறித்து வைத்த மக்கள்

மட்டுமல்லாது கோடைகால சங்கராந்தியை குறிக்கும் வகையில் ஒரு சிற்பமும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதாவது சூரியன் வடக்கு அரைக்கோளத்தில் இருந்து, தெற்கு அரைக்கோளத்திற்கு போகும். இந்த பயணத்தில் சங்கராந்தி நிகழும். பெரும்பாலும் ஜூன் 21ம் தேதி இது நடக்கும். இங்குள்ள சிற்பங்கள் ஒன்றில், பறவையின் கழுத்தில் 'V' சிம்பிள் குறிக்கப்பட்டிருக்கிறது. இப்படி ஒரே ஒரு பறவைத்தான் இருக்கிறது. அதுவும் ஜுன் மாதம் கடைசியில் இந்த பறவையின் சிற்பம் இடம் பெற்றிருக்கிறது.

இதை வைத்து பார்க்கும்போது 12,000 ஆண்டுகளுக்கு முன்னரே, மனிதர்கள் துல்லியமான காலண்டரை பயன்படுத்தியுள்ளார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.

வால் நட்சத்திர தாக்குதல்

மனித குல வரலாற்றையே மாற்றி போட்டிருக்கும் இந்த கண்டுபிடிப்பில் இன்னொரு ஆச்சரியமும் இருக்கிறது. அதாவது கிமு 10,850ம் ஆண்டு நடைபெற்ற வால் நட்சத்திரம் தாக்குதலையும் இங்கு வாழ்ந்த மக்கள் பதிவு செய்திருக்கின்றனர். இந்த மோதல் காரணமாக பூமியின் வானிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. பனிகாலம் தொடங்கியது. இந்த மாற்றத்தையும் மக்கள் உன்னிப்பாக கவனித்து அதை ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். இந்த வால் நட்சத்திரம் மோதல் காரணமாக ஏற்பட்ட மாற்றங்கள் புதிய மதங்களையும் உருவாக்கியிருக்கிறது. இதற்கான சான்றுகள் கல்வெட்டுக்களாக கிடைக்கப்பெற்றிருக்கிறது.

இவர்கள் 'டாரிட்' விண்கல் மழையையும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த மழை விண்ணில் பொழியும். பூமியிலிருந்து இதை பார்க்க மிக அற்புதமாக தெரியும்.

யார் முதலில்?

நமக்கு கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின்படி, கிரேக்கர்கள்தான் முதன்முதலில் காலண்டரை பயன்படுத்தியதாக இதுவரை நம்பிக்கொண்டிருந்தோம். அதேபோல கிமு 150ல் கிரேக்க வானியலாளர் ஹிப்பார்கஸ், பூமி தனது அச்சில் இருந்து சற்று விலகி செல்வதாக கூறியிருந்தார். ஆனால் இதற்கெல்லாம் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இதை துருக்கியில் வாழ்ந்த மக்கள் ஆவணப்படுத்தியுள்ளனர்.

calendar World human

கீழடிக்கு ஒப்பானது

ஆக, இந்தியாவில் கீழடி அகழாய்வு எப்படி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதோ, இந்தியாவின் வரலாற்றை தமிழ்நாட்டிலிருந்து எழுத தொடங்க வேண்டும் என்று கூறியதோ, அதேபோன்ற ஒரு தலைகீழ் மாற்றம் மனித நாகரிக வளர்ச்சி தொடர்பான கண்டுபிடிப்பில் தற்போது நடந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+