For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொடரும் மர்ம மரணம்.. செத்து கரை ஒதுங்கிய 145 திமிங்கலங்கள்.. கடலில் ஏற்படும் திக் மாற்றம்!

நியூசிலாந்தில் 145 திமிங்கலங்கள் ஒரே நாளில் இறந்து கரை ஒதுங்கி இருப்பது உலகம் முழுக்க பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    7 பேர் விடுதலையில் தலையிட முடியாது- மத்திய அரசு- வீடியோ

    கேப் டவுன்: நியூசிலாந்தில் 145 திமிங்கலங்கள் ஒரே நாளில் இறந்து கரை ஒதுங்கி இருப்பது உலகம் முழுக்க பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

    இயற்கையில் ஏதாவது ஒரு உயிரினம் மொத்தமாக சுவடில்லாமல் அழிந்தால் கூட மனிதனால் வாழ்க்கையை சமநிலையுடன் வாழ்வது கஷ்டமாகிவிடும். ஈக்கள் தொடங்கி யானை வரை அனைத்தும் நிரம்பிய சமமான உலகம்தான் மனிதர்கள் வாழ ஏற்றது.

    ஆனால் இந்த சமநிலையில் கடந்த வருடங்களாக பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக தற்போது நியூசிலாந்தின் தீவு ஒன்றில் திமிங்கலங்கள் இறந்து கரையில் ஒதுங்கி இருக்கிறது.

    எத்தனை இறந்தது

    எத்தனை இறந்தது

    மொத்தம் 145 திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளது. நியூசிலாந்தின் ஸ்ட்வார்ட் தீவில் இந்த திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளது. நேற்று அதிகாலை இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. இந்த தீவு மிகவும் தனித்த தீவு ஆகும்.

    எல்லாம் ஒதுங்கியது

    எல்லாம் ஒதுங்கியது

    முதலில் 20 திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளது. அதன்பின் இந்த எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. சில மணி நேரத்தில் 145 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது. இதில் சில உயிருக்கு போராடிய நிலையில் கரை ஒதுங்கி பின் இறந்துள்ளது.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று இன்னும் சரியாக கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கு பின்வரும் விஷயங்கள் காரணங்களாக இருக்க வாய்ப்புள்ளது.

    1. சுற்றுசூழல் மாற்றம்

    2. கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகள்

    3. கடலில் கலக்கும் வேதிப்பொருட்கள்

    4. பூமியின் வெப்பநிலை அதிகரிப்பது

    5.கடலுக்கான நீர் சுழற்சி, மழை இல்லாத காரணத்தால் குறைவது

    ஏற்கனவே இப்படி

    ஏற்கனவே இப்படி

    ஏற்கனவே கடந்த வாரம் இந்தோனேசிய கடலில் இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் கிலோ கணக்கில் பிளாஸ்டிக் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அந்த திமிங்கிலத்தின் வயிறு கிழிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இதில் அதன் வயிற்றில் 6 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

    {document1}

    English summary
    145 Dead Whales found in New Zealand creates a huge quake for the environmentalist.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X