வீரர்கள் பலியால் அலறும் இஸ்ரேல்.. ‛மிலிட்டியா’ குழுவை வைத்து மிரட்டும் ஈரான்! யார் இவர்கள்?
டெல்அவிவ்: இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் என்பது தீவிரமாகி உள்ளது. இந்நிலையில் தான் ஈரான் தனது ஆதரவு ‛மிலிட்டியா’வை வைத்து இஸ்ரேலின் ராணுவ தளத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 2 வீரர்கள் பலியாகி உள்ளனர். மேலும் 24 பேர் காயமடைந்துள்னர்.. இந்த தாக்குதலின்போது முன்கூட்டியே எச்சரிக்கும் சைரன்கள் அலறாத நிலையில் அதனை ஈரான் ஹேக் செய்து ‛அட்டாக்’ நடத்தப்பட்டதா? என்று இஸ்ரேல் குழம்பி போய் உள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பை அழிக்க இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. இதற்கு ஈரான் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பு மூலம் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் கோபமடைந்த இஸ்ரேல், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ருல்லா உள்பட முக்கிய தளபதியை வான்வெளி தாக்குதலில் வீழ்த்தி உள்ளது.

இதனால் ஈரான் நேரடியாக தற்போது இஸ்ரேலை எதிர்க்க தொடங்கி உள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை தொடங்கி உள்ளது. இஸ்ரேல் மீதான இந்த தாக்குதலுக்கு சிரியா, ஈராக் உள்ளிட்ட பிற நாடுகளில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற குழுவினர் உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் இஸ்ரேலின் கோல்டன் ஹெயிட்ஸ் எனும் ராணுவ தளத்தில் நேற்று காலையில் ட்ரோன் மூலம் வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 2 வீரர்கள் பலியாகி உள்ளனர். இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அஸ்கிலான் 13வது பிரிகேட் பட்டாலியனை சேர்ந்த டேனியல் அவிவ் (வயது 19) மற்றும் ஜெருசலேம் பிரிகேட் 13வது பட்டாலியனை சேர்ந்த ஐடி ஸ்பெஷலிஸ்ட் தால் டிரோர் (19) ஆகியோர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 24 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 2 பேர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 21 பேர் லேசான காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலை நடத்தியது ஈரான் ஆதரவு பெற்ற ‛மிலிட்டியா’வினர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது ‛மிலிட்டியா’ என்பது ஆயுத குழுக்களை குறிக்கும் வார்த்தையாகும்.
லெபனானில் எப்படி ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டு வருகிறதோ? அதேபோன்று தான் பிற நாடுகளிலும் ஈரான் ஆதரவு பெற்ற குழுவினர் ஆயுதம் தாங்கி போராடி வருகின்றனர். அவர்களை ‛மிலிட்டியா’ என அழைக்கின்றனர். இந்த ‛மிலிட்டியா’ க்கள் ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி உள்பட வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றனர்.
தற்போது ஈராக் மற்றும் சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுத குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். அதில் தற்போது இஸ்ரேல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியது ஈராக்கில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற அமைப்பினர் என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் அந்த குழுவினர் பெயர் என்ன? என்பது இன்னும் வெளியாகவில்லை.
மேலும் இந்த தாக்குதல் என்பது சரியான திட்டமிடலுடன் ட்ரோன் மூலம் நடத்தப்பட்டுள்ளது. வெடிப்பொருட்களுடன் 2 ட்ரோன்கள் வந்துள்ளது. இதில் ஒரு ட்ரோனனை விமானப்படையினர் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த ட்ரோன் ராணுவ தளத்தை நோக்கி வந்தபோது தாக்குதலை எச்சரிக்கும் சைரன் அலறியது. இதையடுத்து விமானப்படையினர் உஷாராகி கண்காணிப்பை தீவிரப்படுத்தி ட்ரோனை சுட்டு வீழ்த்தினர். அதன்பிறகு அடுத்த சில நிமிடங்களில் இன்னொரு ட்ரோன் இஸ்ரேலின் வடக்கு கோலன் ஹெயிட்ஸ் ராணுவ தளத்தில் தாக்குதல் தொடுத்து உள்ளது.
தாக்குதலை நடத்திய 2வது ட்ரோன் வந்தபோது எச்சரிக்கை செய்யும் சைரன் ஒலிக்கவில்லை. இது எப்படி ஒலிக்காமல் இருந்தது?, சைரன் ஒலி எழுப்பும் அமைப்பு செயலிழந்ததா? அல்லது ஹேக் செய்யப்பட்டதா? என்பது புரியாத புதிராக உள்ளது. இதனால் இஸ்ரேல் குழம்பி போய் அதுபற்றிய விசாரணையை தொடங்கி உள்ளது.
-
டிரம்ப் நிர்வாகத்தில் கருப்பு ஆடு.. விமானி குறித்த விஷயத்தை லீக் செய்த நபருக்கு பகிரங்க வார்னிங் -
டிரம்ப்-ன் முட்டாள்தனம்.. பாப் அல்-மண்டப் நீரிணை மூடப்போகும் ஈரான்? அடுத்த 'Big Warning'! -
"கோமா.. படுகாயம்.." உயிருக்கு போராடும் ஈரானின் புதிய சுப்ரீம் லீடர்.. அமெரிக்க உளவு துறைக்கு போன ரிப்போர்ட் -
டிரம்ப் நினைப்பது போல் ஈரானை முற்றாக அமெரிக்காவால் அழித்துவிட முடியுமா? உண்மை என்ன -
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
"ஈரானை ஒரே இரவில் தாக்கி அழிப்போம்.." டிரம்ப் இறுதி எச்சரிக்கை.. உலக போரை ஆரம்பிக்கும் அமெரிக்கா? -
நக்கல்யா உனக்கு! "சாவி தொலைஞ்சு போச்சு.." டிரம்பிற்கு விபூதி அடிக்கும் ஈரான்! கடுகடுக்கும் அமெரிக்கா -
ஈரான் உட்பட.. 3 நாட்டு தலைவர்களுடன் பேசிய ஜெய்சங்கர்.. திடீரென நள்ளிரவில் பறந்த அழைப்பு! -
அடி கொஞ்சம் ஓவர்.. சட்டென வியூகத்தை மாற்றிய டிரம்ப்! போரின் தன்மையும் மாறுது! -
ஈரான் போரால் பாகிஸ்தானுக்கு பேரிடி.. இப்படி நடக்கும்னு எதிர்பார்த்து இருக்கவே மாட்டாங்கே.. போச்சே -
ஈரான் கண்ணில் மண்ணை தூவி.. பத்திரமாக மீட்கப்பட்ட அமெரிக்க வீரர்! என்ன நடந்தது? விவரம் -
விடிய விடிய தேடுதல்.. ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஜெட் விமானத்தின் பைலைட் மீட்பு! அமெரிக்கா நிம்மதி












Click it and Unblock the Notifications