அபுதாபியில் நடுவானில் ஹீரோவாக மாறிய தமிழக டாக்டர்கள்.. 30,000 அடியில் உயிர் தப்பிய விமான ஊழியர்
அபுதாபி: எத்தியோப்பியாவின் அடிஸ் அப்பாபாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியை நோக்கி எதிகாத் விமானம் ஒன்று சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. விமானத்தின் உள்ளே, 100-க்கும் மேற்பட்ட பயணிகள் நிம்மதியாக வந்து கொண்டிருந்தனர். 30,000 அடியில் விமானம் பறந்து சென்று கொண்டிருந்த போது, விமான பணியாளர் ஒருவர் மரணத்தின் விளிம்பில் போராடினார். அப்போது எழுந்து சென்ற தமிழக டாக்டர்கள், விமான பணியாளரின் உயிரை காப்பாற்றினார்கள். அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
எத்தியோப்பியாவின் அடிஸ் அப்பாபாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியை நோக்கி எதிகாத் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. விமானத்தின் உள்ளே, 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். விமானப் பணியாளர்கள் உற்சாகமாக உணவு வழங்குவதில் மும்முரமாக இருந்தனர். எல்லாம் சாதாரணமாகத் தெரிந்த அந்த வேளையில், திடீரென ஒரு சோகமான சம்பவம் நடந்தது.

விமான பணியாளர் குழுவில் இருந்த ஓர் இளைஞர் திடீரெனக் கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு நிலை குலைந்தார். அவர் கண்கள் கலங்கினார், மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சக பணியாளர்கள் ஓடி வந்து முதலுதவி அளித்தபோதுதான் தெரிந்தது - அது ஏதோ சாதாரண உபாதை அல்ல; ஆபத்தான ஒவ்வாமை என்பதை கண்டனர்.
உயிர் கொடுத்த தமிழ் டாக்டர்கள்
அந்த குறிப்பிட்ட விமானம் நடுவானில், கிட்டத்தட்ட 30,000 அடி உயரத்தில் இருந்ததால் மருத்துவ உதவிக்கு வழியே இல்லாத நிலை இருந்தது. பணியாளர்கள் மத்தியில் பதற்றம் தொற்றிக்கொண்டது. அப்பொழுதுதான், விமானத்தின் உள் அறையில் இருந்து அவசரமாக அறிவிப்பு ஒலித்தது - "விமானத்தில் மருத்துவர்கள் யாரேனும் இருந்தால் உதவிக்கு வருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்." என்று விமான பணியாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
ஆக்சிஜன் அளவு சரிவு
இந்த அவசர அழைப்பைக் கேட்டதும், தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு டாக்டர்கள் இருக்கையில் இருந்து எழுந்து வந்தனர்: மருத்துவ முகாமை முடித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த டாக்டர் கோபிநாதன் மற்றும் டாக்டர் சுதர்சன் பாலாஜி ஆகிய இருவரும் உடனே சென்று விமான பணியாளரை பார்த்தனர். இருவரும் பரிசோதனை செய்தனர். அந்தப் பணியாளரின் உடலில் ஆக்ஸிஜன் அளவு, உயிருக்குப் பேராபத்தை விளைவிக்கக்கூடிய அளவான 80-க்கும் கீழே சரிந்திருந்ததை கண்டனர்.
செயற்கை சுவாசம்
சற்றும் தாமதிக்காமல், அந்த இரண்டு தமிழக மருத்துவர்களும் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று போராட்டத்தில் இறங்கினார்கள். விமானத்தில் இருந்த அவசர மருத்துவ உபகரணங்களைக் கொண்டு, அந்தப் பணியாளருக்குச் செயற்கை முறையில் ஆக்ஸிஜனைத் தடையின்றி வழங்கத் தொடங்கினார்கள்.. ஆக்ஸிஜன் குழாய்கள் பொருத்தினார்கள், நொடிக்கு நொடி துல்லியமாக கண்காணித்து தீவிர சிகிச்சை அளித்தனர்.
காப்பாற்றிய டாக்டர்கள்
விமானப் பணியாளர் மரணத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருந்தார். ஆனால் டாக்டர் கோபிநாதன் மற்றும் டாக்டர் சுதர்சன் பாலாஜி ஆகிய இருவரும் சரியான நேரத்தில் செய்த சிகிச்சை அவரை காப்பாற்றியது. சிறிது நேரத்திலேயே, அந்தப் பணியாளர் சோர்வில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்பினார். அபுதாபி சர்வதேச விமான நிலையத்தை விமானம் அடைந்ததும், மீட்கப்பட்ட பணியாளர் மருத்துவக் குழுவினரால் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்கள். இந்தச் சம்பவம் அந்த விமானத்தில் இருந்த அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மருத்துவர்களுக்கு பாராட்டு
சொந்த ஊரில் மருத்துவ சேவையை முடித்துவிட்டுத் திரும்பும் வழியில், தானாக முன்வந்து ஒரு சக மனிதனின் உயிரைக் காப்பாற்றிய தமிழக மருத்துவர்களான டாக்டர் கோபிநாதன் மற்றும் டாக்டர் சுதர்சன் பாலாஜிக்கு, மற்ற விமானப் பணியாளர்களும், நூற்றுக்கணக்கான பயணிகளும் கைகளைத் தட்டி எழுந்து நின்று தங்கள் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்கள். மருத்துவத்தின் புனிதத்தையும், தமிழர்களின் ஈடு இணையற்ற மனிதாபிமானத்தையும் நடுவானில் நிரூபித்த இந்தச் சம்பவம், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி, நெகிழ்ச்சியலைகளை ஏற்படுத்தி வருகிறது.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications