ஆப்கனில் பெண்கள், குழந்தைகள் நிலை குறித்து கவலை.. அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட 21 நாடுகள் கூட்டறிக்கை
காபூல்: ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகள் நிலை குறித்து மிகவும் கவலை கொள்வதாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடா உட்பட 21 நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்துள்ளது.
ஆப்கான் அரசை, ராணுவத்தை முறியடித்து அதிரடியாக ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர்.
ஆப்கானில் இருந்து அமெரிக்க ராணுவ படைகள் விலகிச்சென்ற பிறகு மொத்த ஆப்கானிஸ்தானையும் தாலிபான்கள் தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர்

மக்கள் படும்பாடு
ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் முழுக்க, முழுக்க கடும் பயத்தில் வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். எப்படியாவது நாட்டை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று ஒரு சில மக்கள் தவித்து வருகின்றனர். இங்கிருந்து சென்றால் போதும் என நினைத்து விமானங்களில் தொங்கி கொண்டு பயணம் செய்து அநியாயமாக பலர் உயிரை இழந்து வருகின்றனர்.

மக்கள் தவிப்பு
தலிபான்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்து விட்டதால் பெண்களுக்கு உடை அணிவது உள்ளிட்ட விஷயங்களில் கடும் கட்டுப்பாடுகள் இருக்கும், மற்ற ஜனநாயக நாடுகளை போல் அங்கு சுதந்திரம் இருக்காது என்று கருதியே ஆப்கான் நாட்டு மக்கள் அங்கு இருந்து வெளியேறி வருகின்றனர். இதேபோல் அனைத்து நாடுகளும் ஆப்கானில் உள்ள தங்கள் நாட்டு தூதரகங்களை மூடியுள்ளன. ஆப்கானில் இருக்கும் தங்கள் நாட்டு மக்களையும் அவசர, அவசரமாக அங்கு இருந்து அழைத்து வருகினறனர். இந்தியாவும் ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களை மீட்டு வருகிறது.

இந்தியா நிலை என்ன?
ஆப்கான் விவகாரத்தை பொறுத்தவரை சீனாவும், பாகிஸ்தானும் தாலிபான்களுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளன. ரஷ்யாவும் தாலிபான்கள் நடவடிக்கையை பாராட்டி இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை தாலிபான்கள் விவகாரத்தில் இதுவரை எந்த ஒரு கருத்தையும் அதிகாரப்பூரவமாக தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் ஆப்கான் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடா உட்பட 21 நாடுகள் ஒரு கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளன.

பெண்கள் நிலை குறித்து கவலை
அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகள், கல்வி, வேலை மற்றும் இயக்க சுதந்திரத்திற்கான அவர்களின் உரிமைகள் குறித்து நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம். ஆப்கானிஸ்தான் முழுவதும் அதிகாரத்தை கைப்பற்றி இருப்பவர்கள்(தாலிபான்கள்) பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டும்.
Recommended Video

உதவ தயாராக உள்ளோம்
மனிதாபிமான உதவியுடன் அவர்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம். கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்த உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை எந்த எதிர்கால அரசும் எவ்வாறு உறுதி செய்கிறது என்பதை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணிப்போம் என்று கூறப்பட்டுள்ளது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications