யு.எஸ். விமான விபத்தில் 6 டாக்டர் தம்பதிகள் பலி: அனாதையான 11 குழந்தைகள்
நியூயார்க்: அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பல் டாக்டர் தம்பதிகள் பலியாகியுள்ளனர். இதனால் அவர்களின் 11 குழந்தைகள் ஆதரவற்றவர்களாகியுள்ளனர்.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கிஸ்ஸிம்மியில் நடந்த பல் மருத்துவர்களுக்கான மாநாட்டில் 3 பல் டாக்டர் தம்பதிகள் கலந்து கொண்டனர். அவர்கள் மாநாடு முடிந்த பிறகு ஞாயிற்றுக்கிழமை சிறிய ரக விமானத்தில் மிசிசிபியில் உள்ள ஆக்ஸ்போர்டுக்கு கிளம்பினர்.
விமானம் அலபாமா மாநிலத்தில் உள்ள டுஸ்கலூசா வான்வெளியில் பறந்தபோது பிரச்சனை ஏற்பட்டது.

விமானம்
விமானத்தில் காலை 11.10 மணிக்கு கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் டுஸ்கலூசா விமான நிலையம் அருகே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் விபத்துக்குள்ளான 3 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் சென்றனர்.

6 பேர் பலி
மீ்ட்பு குழுவினர் விரைந்து சென்ற போதிலும் யாரையும் காப்பாற்ற முடியவில்லை. விமானத்தில் இருந்த திருமணமான 3 ஜோடிகளுமே பலியாகிவிட்டனர். இந்த தகவலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

11 குழந்தைகள்
விமான விபத்தில் பலியானவர்களுக்கு 11 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரே நாளில் தாய், தந்தையை இழந்து ஆதரவற்றவர்களாகிவிட்டது அப்பகுதி மக்களை கவலை அடைய வைத்துள்ளது.

3 குழந்தைகள்
விபத்தில் பலியானா ஆக்ஸ்போர்டை சேர்ந்த பல் மருத்துவர்களான ஜேசன் மற்றும் லீ பரீசுக்கு 10, 7 மற்றும் 5 வயதில் 3 குழந்தைகள் உள்ளனர். அதில் கடைசி குழந்தை கடந்த வாரம் தான் பள்ளிக்கு செல்லத் துவங்கியுள்ளது. பலியான மற்றொரு தம்பதிக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications