For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இங்கிலாந்தின் வேகத்திலும் சுழலிலும் சிக்கிய பாகிஸ்தான் - வீழ்ந்த 3 தருணங்கள்

By BBC News தமிழ்
|
பாகிஸ்தான்
Getty Images
பாகிஸ்தான்

டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து வீரர் ஆதில் ரஷீத் வீசிய 12-ஆவது ஓவர் போட்டியின் போக்கை முற்றிலுமாக இங்கிலாந்தின் பக்கமாகத் திருப்பியது. அது பாகிஸ்தானின் அடித்தளத்தையே அசைத்துவிட்டது

.

ரன் எதையும் எடுக்க விடாமல், நீடித்து ஆடிக் கொண்டிருந்த பாபர் ஆஸமையும் வெளியேற்றிய ஓவர் அது.

ரன் எதையும் எடுக்க விடாமல் நீடித்து ஆடிக் கொண்டிருந்த பாபர் ஆஸமைத் திணறவைத்து அவரை வெளியேற்றிய ஓவர் அது.

டி20 உலகக் கோப்பையில் 1992-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியைப் போல அதிசயத்தை நிகழ்த்த வேண்டும் என்ற வேட்கையுடன் இறுதிப் போட்டியில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் நம்பிக்கையை இங்கிலாந்து அணி தனது மிரட்டலான பந்துவீச்சால் தகர்த்தது.

மெல்போர்ன் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இன்றைய போட்டியில் தனது உறுதியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சும், சுழற்பந்துவீச்சும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்தன. பாகிஸ்தான் பேட்ஸ் மேன்களை எந்த வகையிலும் நிலைத்து நின்று ஆட முடியாதபடி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தும் வகையில் இங்கிலாந்தின் பந்துவீச்சு இருந்தது.

சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷித், வேகப் பந்துவீச்சாளர் சாம் கரன் ஆகியோரின் பந்துவீச்சு பாகிஸ்தானை ரன் எடுக்க விடாமல் கட்டுப்படுத்தியதுடன் நிலைத்து நின்று ஆட முடியாதபடியும் செய்தன.

இந்த வெற்றியின் மூலம் ஒரே நேரத்தில் 50 ஓவர் போட்டியிலும் 20 ஓவர் போட்டியிலும் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் அணி என்ற பெருமையை இங்கிலாந்து அணி பெற்றிருக்கிறது.

பாகிஸ்தானின் அதிரடி உத்தி பலனளிக்கவில்லை

நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் ரிஸ்வானும் தானும் அதிரடியாக ஆட வேண்டும் என்று முடிவெடுத்துதான் மைதானத்துக்குள் இறங்கியதாக பாபர் ஆஸம் கூறியிருந்தார். அதே போன்ற ஒரு உத்தியையே இந்தப் போட்டியிலும் அவர்கள் கடைப்பிடித்திருக்கக் கூடும். பவர் பிளே ஓவர்களில் அதிகமாக ரன்களை எடுத்துவிட்டால் மிகப்பெரிய இலக்கை எட்டிவிடலாம் என்ற அடிப்படையிலான உத்திதான் இது.

ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்த உத்தியை பாகிஸ்தானால் செயல்படுத்த முடியவில்லை. 6 ஓவர் பவர் பிளே முடிவில் பாகிஸ்தான் அணி 39 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இரண்டு முக்கியமான விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. இதனால் அரையிறுதியைப் போல அந்த அணியால் ரன்களைக் குவிக்க முடியவில்லை.

பாகிஸ்தான்
Getty Images
பாகிஸ்தான்

வேகத்திலும் சுழலில் திணறிய பாகிஸ்தான்

இந்தத் தொடரின் நாயகனான இங்கிலாந்தின் வேகப் பந்துவீச்சாளர் சாம் கரனின் பந்துகள் இந்தப் போட்டி முழுவதுமே பாகிஸ்தான் வீரர்களை மிரட்டின. 4 ஓவர்களில் அவர் 12 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார். 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். தொடக்க ஆட்டக்காரரான ரிஸ்வானின் விக்கெட்டும் இதில் அடங்கும். டெத் ஓவர்களில் இவருடைய பந்துகளைத் தொட முடியவில்லை. இவர் வீசிய 24 பந்துகளில் 15 பந்துகளில் ரன்கள் எடுக்கப்படவில்லை. ஒரு பவுண்டரியும் சிக்சரும்கூடக் கிடையாது.

ஆதில் ரஷீத்தும் கிட்டத்தட்ட இதே போன்றுதான் பந்துவீசினார். ஆதில் ரஷீத் வீசிய 12 ஓவர் பாகிஸ்தானின் ஒட்டுமொத்தத் திட்டத்தையுமே புரட்டிப் போட்டுவிட்டது. அவரது கூக்ளியில் திணறிய பாபர் ஆஸம் பேட்டை எங்கோ சுழற்ற, பந்து எங்கோ பட்டு ரஷீத்திடமே தஞ்சமடைந்துவிட்டது. அங்கேயே பாகிஸ்தானின் அதிக ரன் குவிப்புத் திட்டம் நொறுங்கிவிட்டது.

பென் ஸ்டோக்ஸ் போட்ட நங்கூரம்

பவர் பிளேயில் பாகிஸ்தானுக்கு என்ன நேர்ந்ததோ அதுவேதான் இங்கிலாந்துக்கும் நடந்தது. பவர் பிளே ஓவர்களில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 49 ரன்களை மட்டுமே எடுத்தது. சாஹின் ஷா அப்ரிடியின் பந்துவீச்சு இங்கிலாந்தை திணறடித்தது. இங்கிலாந்து வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர்.

ஆனால் பவர் பிளேயில் ஆட்டத்தை தொடங்கிய பென் ஸ்டோக்ஸ் கடைசிவரை ஆட்டமிழக்காமல் அரைச் சதம் அடித்தார். அவர் அவுட் ஆகி இருந்தால் ஆட்டத்தின் போக்கே மாறியிருக்கும். பாகிஸ்தான் அணி வெற்றி பெறவும் வாய்ப்புக் கிடைத்திருக்கும்.

போட்டியின் ஆட்ட நாயகனாகவும் தொடரின் நாயகனாவும் தேர்வு செய்யப்பட்ட சாம் கரனும் தனது பேட்டியின்போது பென் ஸ்டோக்ஸின் ஆட்டத்தைப் பற்றி மெச்சினார்.

இங்கிலாந்து
Getty Images
இங்கிலாந்து

போட்டியில் என்ன நடந்தது?

டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அரையிறுதிப் போட்டியில் சிறப்பாக ஆடிய பாபர் ஆஸமும் முகமது ரிஸ்வானும் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். ஆனால் நியூஸிலாந்துடனான போட்டியைப் போல இந்தப் போட்டியில் அந்த இணை நீடித்து நிற்கவில்லை.

முதல் ஓவரிலேயே முகமது ரிஸ்வான் ஒரு ரன் அவுட்டில் இருந்து நூலிழையில் தப்பினார். ஸ்டோக்ஸ் வீசிய பந்தை மிட் ஆன் திசையில் அடித்த ரிஸ்வான் வேகமாக ரன் எடுக்க ஓடியபோது கிறிஸ் ஜோர்டான் எறிந்த பந்து ஸ்டம்பை விட்டு சற்று விலகிச் சென்றதால் ரிஸ்வான் தப்பினார். பவர் பிளே ஓவர்களில் பாகிஸ்தான் அணியின் ரன் எடுக்கும் வேகம் குறைவாகவே இருந்தது.

5 ஆவது ஓவரில் சாம் கரன் பந்துவீச்சில் ரிஸ்வான் போல்டாகி ஆட்டமிழந்தார். மிகவும் நம்பிக்கையாக கருதப்பட்ட ரிஸ்வான் 15 ரன்களை மட்டுமே எடுத்தார். அதன் பிறகு அதிரடியாக ஆடும் முகமது ஹாரிஸ் களமிறங்கினார். அணியின் ரன் எடுக்கும் வேகம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. எனினும் 6 ஓவர் பவர் பிளே முடிவில் பாகிஸ்தான் அணி 39 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

பாகிஸ்தானை நொறுக்கிய ஓவர்

8-ஆவது ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷீத் வந்தார். அவரது முதல் பந்திலேயே முகமது ஹாரிஸ் முன்னே இறங்கி லாங் ஆன் திசையில் தூக்கி அடித்த பந்தை ஸ்டோக்ஸ் எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் பிடித்தார். ஹாரிஸ் 12 பந்துகளில் 8 ரன்களை எடுத்து வெளியேறினார்.

முதல் பத்து ஓவர்களில் பாகிஸ்தான் அணி குறைந்த வேகத்திலேயே ரன்களை எடுத்தது. தொடர்ச்சியான பவுண்டரிகளை அந்த அணியால் அடிக்க முடியவில்லை. 10 ஓவர் முடிந்த போது 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 68 ரன்களை பாகிஸ்தான் அணி எடுத்திருந்தது.

12 ஆவது ஓவரின் முதல் பந்தில் பாபர் ஆஸம் அவுட் ஆனார். ரஷீத் வீசிய கூக்ளியை அடிக்க முயன்றபோது மட்டையின் வெளிப்புறம் பட்ட பந்தை ரஷீத்தை நோக்கிச் சென்றது. அதை பாய்ந்து பிடித்து பாபரை வெளியேற்றினார் ரஷீத். இந்தக் கட்டம் போட்டியின் முக்கியத் திருப்பமாக அமைந்தது. அப்போது பாகிஸ்தான் அணி 84 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அந்த ஓவரில் அடுத்த 5 பந்துகளிலும் ரன் எதுவும் எடுக்கப்படவில்லை.

பாகிஸ்தான்
Getty Images
பாகிஸ்தான்

அடுத்த ஓவரிலேயே ஸ்டோக்ஸ் பந்தில் கீப்பரிடம் பிடிகொடுத்து இஃப்திகார் அகமது அவுட் ஆனார்.

அதன் பிறகு பாகிஸ்தான் அணியால் ரன் குவிப்பை வேகப்படுத்த முடியவில்லை. ஒன்றும் இரண்டுமாகவே ரன்கள் வந்தன. பவுண்டரிக்கு பந்து செல்வது அபூர்வமானது. எனினும் ஒரு முனையில் இருந்த ஷான் மசூதும், மற்றொரு முனையில் ஷதாப் கானும் ஓரளவு கணிசமான ரன்களை எடுத்துக் கொண்டிருந்தனர்.

டெத் ஓவர்கள் தொடங்கியதும் தொடங்கியதும் களத்தில் இருந்த ஷான் மசூத் அதிரடியாக ஆட முற்பட்டு சாம் கரன் பந்தில் மிட் விக்கெட் திசையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 28 பந்துகளில் 38 ரன்களை எடுத்து பாகிஸ்தான் அணிக்கு பெரிதும் உதவினார்.

அடுத்த ஓவரிலேயே ஷதாப் கானும் ஆட்டமிழந்ததால் பாகிஸ்தான் அணி 123 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசி இரண்டு ஓவர்களிலும் பாகிஸ்தான் அணியால் பெரிய அளவில் ரன்களை எடுக்க முடியவில்லை. 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 137 ரன்களை எடுத்தது.

இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு என இரண்டுமே பாகிஸ்தானே திணறடித்தன. 4 ஓவர்களை வீசிய சாம் கரன், வெறும் 12 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆதில் ரஷீத் வீசிய ஒரு ஓவரில் ரன்கள் எதுவும் எடுக்கப்படவில்லை. அவர் வீசிய 4 ஓவர்களில் 22 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதேபோல் கிறிஸ் ஜோர்டன் 27 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பாகிஸ்தான்
Getty Images
பாகிஸ்தான்

பவர் பிளேயில் திணறிய இங்கிலாந்து

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கம் முதலே பாகிஸ்தானிய பந்துவீச்சாளர்கள் மிரட்டினார்கள். இந்தியாவுடனான போட்டியில் சிறப்பாக ஆடி வெற்றிக்கு உதவிய இங்கிலாந்தின் தொடக்க ஆட்டகாரர் ஹேல்ஸ் சாஹீன் ஷா அப்ரிடியின் முதல் பந்திலேயே ஸ்டம்பை பறிகொடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும் நசீம் ஷாவின் இரண்டாவது ஓவரில் 14 ரன்களை எடுத்தது இங்கிலாந்து.

4-ஓவரில் ஃபில் சால்ட் ஆட்டமிழந்ததால், இங்கிலாந்து அணிக்கு தடுமாற்றம் ஏற்பட்டது. ரன் குவிக்கும் வேகமும் உடனடியாகக் குறைந்தது. அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த ஜோஸ் பட்லர் 6-ஆவதி ஓவரில் விக்கெட் கீப்பர் ரிஸ்வானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 17 பந்துகளில் 26 ரன்களை எடுத்திருந்தார்.

10 ஓவர்கள் முடிந்திருந்த போது 3 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்களை எடுத்திருந்தது இங்கிலாந்து. 60 பந்துகளில் 61 ரன்களை எடுக்க வேண்டும், 7 விக்கெட்டுகள் கைவசம் இருக்கின்றன என்ற நிலையில் இங்கிலாந்து அணியின் கட்டுப்பாட்டிலேயே போட்டி இருந்தது.

பென் ஸ்டோக்ஸ்
Getty Images
பென் ஸ்டோக்ஸ்

தேவையான ரன்ரேட் குறைவாக இருந்ததால் அப்போது களத்தில் இருந்து ஹேரி ப்ரூக்கும், பென் ஸ்டோக்ஸும் மெதுவாக்வே ஆடத் தொடங்கினார்கள். 11 ஓவரில் 2 ரன்களும் 12-ஆவது ஓவரில் 3 ரன்களையும் மாத்திரமே அவர்கள் எடுத்தார்கள். விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருந்தார்கள்.

ஆனால் 13-ஆவது ஓவரில் ஷதாப் வீசிய பந்தில் ஷாஹீன் ஷா அப்ரிடியிடம் பிடிகொடுத்து ப்ரூக் ஆட்டமிழந்தார். அதன் பிறகு இங்கிலாந்து வீரர்கள் ரன்களை எடுக்கத் தடுமாறினார்கள். 14-ஆவது ஓவரில் 2 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன.

ஆனால் மொயின் அலியும் பென் ஸ்டோக்ஸும் விக்கெட்டை இழக்காமல் ஆடிக் கொண்டிருந்தனர். 16-ஆவது ஓவரில் பென் ஸ்டோக்ஸ் ஒரு சிக்சரும் பவுண்டரியும் அடித்து நம்பிக்கையை ஏற்படுத்தினார். 17-ஆவது ஓவரில் மொயின் அலி 3 பவுண்டரிகளை விளாசினார். அதனால் இங்கிலாந்து அணி வெற்றியை நோக்கி எளிதாக முன்னேறியது.

19-ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் பென் ஸ்டோக்ஸ் வெற்றிக்கான ரன்னை எடுத்தார். இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 49 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த ஸ்டோக்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்கவில்லை.

https://www.youtube.com/watch?v=bVW5TpYp1Zs

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
England beat Pakistan in T20 Cup Finals: England and Pakistan T20 World Cup final results.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X