ஓமனில் மூன்று வருட மழை ஒரே நாளில் பெய்தது.. 15 பேர் பலி.. அதிரவைக்கும் வீடியோ!
ஓமன் நாட்டில் நேற்று முதல் நாள் மற்றும் நேற்று காலை, பெரிய அளவில் மழை பெய்துள்ளது.
Recommended Video

மஸ்கட்: ஓமன் நாட்டில் நேற்று முதல் நாள் மற்றும் நேற்று காலை, பெரிய அளவில் மழை பெய்துள்ளது. மூன்று வருடத்திற்கு பெய்ய வேண்டிய மழை மொத்தமாக ஒரே நாளில் பெய்துள்ளாது.
ஓமன் நாட்டில் மட்டுமில்லாமல் அருகாமையில் உள்ள ஏமன் நாட்டிலும் இந்த மழை பெய்துள்ளது. இந்த மோசமான மழை காரணமாக மொத்தம் 15 பேர் இதுவரை மரணம் அடைந்துள்ளனர்.
அங்கு மீட்பு பணி செய்ய முடியாமல் அரசாங்கம் கஷ்டப்பட்டு வருகிறது. இன்னும் அங்கு சிறிய அளவில் மழை பெய்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன
இந்த பெரிய மழைக்கு அங்கு ஏற்பட்ட புயலே காரணமாகும். மெகுனு என்ற புயல் இந்த மாத இறுதியில் உருவானது. கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்து கொண்டே சென்ற அந்த புயல் பெரிய அளவில் மழையை உண்டாக்கி உள்ளது. தொடர்ந்து இரண்டு நாட்கள் இந்த புயல் வீசியது. 260கிமீ வேகம் வரை இந்த புயல் வீசியது.

எப்படி
இங்கு மேக வெடிப்பிற்கு நிகராக மழை பெய்துள்ளது. மொத்தமாக ஒரு இடத்தில் கூடி இருக்கும் மேகம் அப்படியே வெடித்து மொத்தமாக மழை கொட்டுவதை மேக வெடிப்பு என்று கூறுவார்கள். அந்த மேக வெடிப்பிற்கு நிகராகத்தான் மழை பெய்துள்ளது. இதனால் ஓமனில் உள்ள சலாலா நகரில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மொத்தமாக எல்லா பகுதிகளும் இதனால் மூழ்கி இருக்கிறது.

எவ்வளவு சேதம்
இந்த மழை மற்றும் புயல் காரணமாக மொத்தம் 15 பேர் மரணம் அடைந்துள்ளனர். 45 பேர் காணாமல் போய் இருக்கிறார்கள். இன்னும் வீடுகளில் சிக்கி உணவின்றி தவிக்கும் மக்களை காப்பாற்ற அரசு திணறி வருகிறது. மொத்தம் 2 லட்சம் வீடுகளை இந்த வெள்ளம் சூழ்ந்துள்ளது. மொத்தமாக கடந்த மூன்று நாட்களாக அந்த நகரம் ஸ்தம்பித்து போய் உள்ளது.
|
மழை வீடியோ
சலாலாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 278.2 மிமீ மழை பெய்துள்ளது. புயல் மற்றும் மழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தன. இந்த மழையின் வீரியம் குறித்த வீடியோ வெளியாகி உள்ளது. இதில் மழை எவ்வளவு மோசமாக கொட்டுகிறது என்பது தெளிவாக தெரிகிறது.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications