ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு... தொழுகைக்கு வந்தவர்களில் 32 பேர் பலி.. 53 பேர் படுகாயம்..!

Subscribe to Oneindia Tamil

கந்தஹார்: ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரில் அமைந்துள்ள ஷியா பிரிவு மசூதி ஒன்றில் குண்டுவெடித்து 32 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

தெற்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் அமைந்திருக்கும் கந்தஹார் நகரில் உள்ள ஷியா பிரிவு மசூதியில், இன்று வழக்கம் போல் வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகை நடத்தப்பட்டது. ஷியா பிரிவினர் மட்டுமே தொழுகை நடத்தக் கூடிய அந்த பள்ளிவாசலில் 3 முறை குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்திருக்கின்றன.

மசூதியின் பிரதான நுழைவு வாசல், தொழுகை நடத்தக் கூடிய முன் இடம், கை கால்களை தூய்மை செய்யக்கூடிய (ஒளு) இடம் என மூன்று இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன. இதில் தொழுகைக்கு வந்திருந்தவர்களில் 32 பேர் பரிதாபமாக உடல்சிதறி உயிரிழந்துள்ளனர். மேலும், 53 பே

32 Killed, 53 Injured In Blast At Mosque In Afghanistans Kandahar

ர் படுகாயங்களுடன் நகரின் மையப்பகுதியில் உள்ள மிர்வய்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே மீட்புப் பணிகள் அங்கு தொடர்கின்றன. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், மசூதி மீதான இந்த தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த 2017-ம் ஆண்டு மேற்கு காபூலில் உள்ள ஷியா பிரிவு மசூதி ஒன்றிலும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது. அப்போதும் 55 பேர் உயிரிழந்தனர், 56 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இதனால் இன்று நடைபெற்ற ஷியா பிரிவு மசூதி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பினர் தான் பின்னணியில் இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் நாட்டு மொத்த மக்கள் தொகையில் 10% பேர் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஷியா பிரிவினரை பொறுத்தவரை சன்னி பிரிவு இஸ்லாமியர்களின் வணக்க வழிபாட்டு முறைகளிலிருந்து லேசான மாற்றங்களை பின்பற்றுபவர்கள்.

இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை அன்றும் குண்டூஸ் பகுதியில் அமைந்துள்ள ஷியா பிரிவு மசூதி ஒன்றில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. புதிய தலிபான் அரசு ஷியா பிரிவு இஸ்லாமிய சகோதரர்களை காப்பது தங்கள் கடமை என வாய்சொல் வீரமாக பேசினாலும் குண்டு வெடிப்பு நிகழ்வுகளை தடுத்து நிறுத்தமுடியவில்லை.

இதனால் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் அச்சத்துடனேயே வாழ வேண்டிய அவல நிலை ஆப்கானிஸ்தானில் உருவாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+