அமெரிக்காவின் கலிபோர்னியாவில் துப்பாக்கிச் சூடு... 5 பேர் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு பள்ளியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கி சூடு நடத்தியவர் உள்பட 5 பேர் பலியாகிவிட்டனர்.

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள தெஹமா கவுண்டி பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் மர்ம நபர் ஒருவர் நுழைந்தார். அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினார்.

4 killed in shooting ‘rampage’ in rural California town before gunman killed by police

இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய நபரை சுட்டுக் கொன்றதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய மர்மநபருக்கும் அவரது பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே இருந்த தகராறால் இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக தெரிகிறது. ஏனெனில் பாதிக்கப்பட்டவர்களில் அந்த நபரின் பக்கத்து வீட்டுக்கார பெண்ணும் ஆவார்.

துப்பாக்கிச் சூடு கேட்டவுடன் அங்கிருந்த ஆசிரியர்கள் வகுப்பறைகளை உள்பக்கமாக பூட்டிக் கொண்டனர். எனினும் அந்த நபர் விடாமல் பூட்டிய கதவுகளை நோக்கி சுட்டுள்ளார்.

கடந்த வாரம் டெக்சாஸ் மாகாணத்தில் பாப்டிஸ்ட் சர்ச் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 26 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A series of shootings in rural California, including at an elementary school, has left five people dead, including the shooter.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற