For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு கிலோ எடையைக் குறைத்தால் ஒரு கிராம் தங்கம்– அள்ளிக் கொடுக்கும் துபாய் அரசு!

Google Oneindia Tamil News

ஷார்ஜா: துபாயில் ஒரு கிலோ எடை குறைத்தால் ஒரு கிராம் தங்க காசு வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.

அளவுக்கு அதிகமாக உடல் குண்டாகி அவதிக்குள்ளாவதை தவிர்க்கும் வகையில் உடல் பருமனை குறைப்பவர்களை ஊக்குவிக்கும் திட்டத்தை கடந்த ஆண்டு துபாய் அரசு அறிமுகம் செய்தது.

அதன்படி, ஒரு கிலோ எடையை குறைத்தால் 1 கிராம் தங்க காசு பரிசாக வழங்கப்படுகிறது.

குடும்பத்தினர்களுக்கு முக்கியத்துவம்:

இந்த வருடம் 13 வயதுகுட்பட்ட குழந்தைகளும், குடும்பத்தினர்களும் பங்கேற்கும் வகையில் அவர்களுக்கு இந்த திட்டத்தில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

2 கிலோ எடை குறைப்பு:

நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் குறைந்த பட்சம் 2 கிலோ உடல் எடையை குறைத்தால் பரிசு வழங்கப்படுகிறது.

குழந்தைக்கு 2 கிராம் தங்கம்:

இந்த வருடம் குழந்தைகள் ஒரு கிலோ எடையை குறைத்தால் 2 கிராம் தங்கம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

15 ஆயிரம் பேர் பங்கேற்பு:

இதில் 15 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் 7,350 பேர் பரிசு பெற தகுதி பெற்றுள்ளனர்.

40 கிலோ தங்கம் பரிசு:

இதில் 200 பேர் குழந்தைகள் ஆவர். சுமார் 40 கிலோ வரை தங்கம் பரிசாக வழங்கப்பட உள்ளது. பரிசளிப்பு விழா வரும் டிசம்பரில் நடக்க உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

English summary
This year, 7,350 individuals had sweated it out to win the contest, which required participants to lose a minimum of two kilos to succeed. Dubai will dish out nearly 40kg of gold coins worth about Dh6 million to winners of its unique weight-loss contest that rewards those who cut down the flab with gold, Khaleej Times has learnt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X