For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆப்கானில் 14 பேரை பலி கொண்ட அமெரிக்கா ராணுவ விமான விபத்து.... தலிபான்கள் சுட்டு வீழ்த்தினர்?

By Mathi
Google Oneindia Tamil News

காபூல்: ஆப்கானிஸ்தானில் 14 பேரை பலி கொண்ட அமெரிக்காவின் சி-130 ஹெர்குலிஸ் ரக விமானத்தை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக தலிபான்கள் அறிவித்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் விமான நிலையத்தில் சி-130 ரக விமானம் விபத்துக்குள் சிக்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 14 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர்.

6 Americans among 14 dead after military plane crashes in Afghan

இவர்களில் 6 பேர் அமெரிக்கர்கள். விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் என்னவென்று உடனடியாக அறிவிக்கப்படவில்லை.

சி-130 விமானம் ராணுவத்தின் பயன்பாட்டுக்காக வடிவமைக்கப்பட்டது. இவை பெரும்பாலும் கடற்படை வீரர்கள் மற்றும் கனரக பொருட்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படுகிறது.

இதனிடையே தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தமது ட்விட்டர் பக்கத்தில், எங்கள் முஜாஹிதீன்கள்தான் அமெரிக்காவின் விமானத்தை சுட்டு வீழ்த்தினர். அதில் 15 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவித்துள்ளது அப்பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
14 people including 6 Americans were killed when a U.S. Air Force C-130J transport aircraft crashed in eastern Afghanistan as it was approaching the airport in Jalalabad, officials said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X