For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க சிறுவனுக்கு செயற்கையாக உருவாக்கப்பட்ட காதுகளை பொருத்திய இந்திய வம்சாவளி டாக்டர்

By Siva
Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவைச் சேர்ந்த 8 வயது சிறுவனக்கு அவரது உடலில் உள்ள விலாவில் இருந்து எடுக்கப்பட்ட குருத்தெலும்பை கொண்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட காதுகள் பொருத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் உள்ள கான்டனில் இருக்கும் பிரேசர் துவக்கப் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருபவர் எலைஜா பெல்(8). அவருக்கு பிறக்கும்போதே காதுகள் இல்லை. அதாவது கேட்கும் தன்மை உடைய உள்பகுதி இருந்தது ஆனால் பொதுவாக இருக்கும் வெளிப்பகுதி இல்லை.

8-year-old boy in US gets new ears grown by Indian-origin doc

சிறுவனை இது தொடர்பாக ஆக்ரோன் குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிறுவனை பரிசோதனை செய்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் ஆனந்த் மூர்த்தி அவருக்கு செயற்கை முறையில் காதுகளை உருவாக்கி பொருத்த முடிவு செய்தார்.

இதையடுத்து அவரின் விலாவில் இருந்து குருத்தெலும்பு, தொடையில் இந்து தோல் எடுத்து மூர்த்தி செயற்கை காதுகளை உருவாக்கினார். வெளிக்காது இல்லாததால் அதாவது காது துவாரம் இல்லாததால் சிறுவன் அவதிப்பட்டு வந்தான்.

சிறுவனுக்கு 4 வயது இருக்கையில் இருந்து இதுவரை மொத்தம் 5 முறை அறுவை சிகிச்சை செய்து செயற்கையாக செய்யப்பட்ட காதுகள் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி தான் இறுதி கட்ட அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

செயற்கையாக காதுகளை செய்து அதை பொருத்தியுள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.

English summary
Elijah’s ear transformation has taken place over the past 3 years as he has undergone 5 surgeries with Dr. Murthy. After a series of 'miraculous' surgeries, an Indian-origin doctor in the US has successfully grown outer ears from rib cartilage in an 8-year-old boy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X