வெறும் 14 மணி நேரத்தில் 800 முறை நிலநடுக்கம்.. குலுங்கிய ஐஸ்லாந்து.. எமெர்ஜென்சி அறிவித்த அரசு
ரியேக்ஜேவிக்: ஐஸ்லாந்து நாட்டில் வெறும் 14 மணி நேரத்தில் 800 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு அவசர நிலையை அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது. அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையே வட அட்லாண்டிக் மற்றும் ஆர்க்டிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடு ஐஸ்லாந்து. பனிப்பிரதேசங்களை உள்ளடக்கிய ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்புகளும் அடிக்கடி நிகழும் பகுதியாக உள்ளது. ஐஸ்லாந்தில் மட்டும் 300 க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. இதனால், அங்கு நிலநடுக்கம் ஏற்படுவதும் அடிக்கடி நிகழும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்தான், ஐஸ்லாந்தில் கடந்த 14 மணி நேரத்தில் மட்டும் சுமார் 800 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஐஸ்லாந்தின் தென்மேற்கில் உள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ச்சியான இந்த நிலநடுக்கத்தினால் அப்பகுதி மக்கள் சற்று அச்சம் அடைந்தனர். தொடர்ந்து நிலநடுக்கம் உணரப்பட்டாலும் மிகக் கடுமையான அளவுக்கு ஏற்படவில்லை.
அதிகபட்சமாக கிரிண்டாவிக் வடக்கு பகுதியில் 5.5 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானது. தொடர் நிலநடுக்கங்கள், எங்கு எந்த நேரத்திலும் எரிமலை வெடிக்கலாம் என்ற அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஐஸ்லாந்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் எரிமலை வெடிப்பு நிகழக்கூடுமென்று ஐஸ்லாந்து நாட்டின் வானிலை மையம் எச்சரித்து உள்ளது.
இதையடுத்து கிரிண்டாவிக் கிராமத்தில் உள்ள எரிமலையை ஒட்டி வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். தலைநகர் ரியேக்ஜேவிக்கில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்டதாகவும் இதனால், ஜன்னல் கண்ணாடிகள் அதிர்ந்தன என்றும் அங்குள்ள மக்கள் கூறினர்.
மேலும் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் ஆடியதால் மக்கள் பீதி அடைந்தனர். அக்டோபர் மாதத்தில் இருந்து தற்போது ஐஸ்லாந்தில் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை நில அதிர்வுகள் ஏர்பட்டுள்ளது. ஐஸ்லாந்தில் கடந்த ஜூலை மாதம் ஒரே நாளில் 2,200 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது நினைவிருக்கலாம். அதன்பிறகு இப்போது 14 மணி நேரத்தில் 800 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எரிமலை வெடிப்பு எப்போது வேண்டும் என்றாலும் நிகழக்கூடும் என்பதால் அங்கு 3 இடங்களில் தகவல் மையங்களும் திறக்கப்பட்டுள்ளன..
முன்னெச்சரிக்கையாக, கிரிண்டாவிக் அருகே உள்ள பிரபல சுற்றுலா தலமான ப்ளூ லகூன் மூடப்பட்டுள்ளது. கிரிண்டாவிக் நகரில் இருந்து வடக்கு மற்றும் தெற்கு நோக்கி செல்லும் சாலைகள் நிலநடுக்கத்தால் சேதம் அடைந்துள்ளது. இதனால், சாலைகளை போலீசார் மூடினர். சாலைகள் மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications