ஐஃபோன் உற்பத்தியில் அதிரடி காட்டிய இந்தியா.. ஆனாலும் சீனாவை இன்னும் நம்பும் ஆப்பிள்!
டெல்லி: கடந்த காலங்களில் சீனாவிலிருந்துதான் அமெரிக்காவுக்கு தேவையான ஐபோன்கள் அதிக அளவில் உற்பத்தியாகின. ஆனால், இன்று இந்தியாவில்தான் 97.6% ஐபோன்கள் உற்பத்தியாகின்றன.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் தொடங்கியிருக்கிறது. எனவே சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரித்திருக்கிறது.

ஆப்பிள் ஐபோன்கள் இதற்கு முன்னர் சீனாவில்தான் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வந்தன. காரணம் ஐபோன் தயாரிப்பு என்பது மிகப்பெரிய வணிகம். மட்டுமல்லாது இதற்கு தேவையான உதிரிபாகங்களை சரியாக பொருத்த வேண்டும். இந்த வேலையை செய்யும் உயர் தொழில்நுட்பத்தை கையாள அதைப்பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். மட்டுமல்லாது இப்படி தொழில்நுட்பம் தெரிந்த அதிக அளவிலான ஆட்களும் வேண்டும். இவை அனைத்தும் சீனாவில்தான் கிடைக்கிறது. எனவேதான் சீனாவில் அதிக அளவில் ஐபோன் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆனால் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே நடக்கும் வரி போர் காரணமாக ஐபோன் தயாரிப்பு காஸ்ட்லியாக மாறியிருக்கிறது. எனவே, ஐபோன் உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்றியது ஆப்பிள் நிறுவனம். S&P Global Market Intelligence எனும் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இந்தியாவிலிருந்து ஐபோன் ஏற்றுமதி 219% அதிகரித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் இந்த ஏற்றுமதி 82% அதிகரித்திருக்கிறது.
கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் சுமார் 1.71 மில்லியன் யூனிட் ஐபோன்கள் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகியிருக்கிறது. இதுவே மார்ச் மாதம் 4.43 மில்லியன் யூனிட்களாக அதிகரித்துள்ளது. டாடா எலக்ட்ரானிக்ஸ், பெகட்ரான் மற்றும் பாக்ஸ்கான் உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் ஐபோன் உற்பத்தி சாத்தியமாகியிருக்கிறது.
இருப்பினும் கடந்த ஆண்டு இது குறைவான அளவாகவே இருந்தது. அதாவது கடந்த ஆண்டு விற்பனையான 75.9 மில்லியன் போன்களில் வெறும் 3.1 மில்லியன் மட்டுமே இந்தியாவில் உற்பத்தியாகின. இன்றைய தேதியில் இந்தியாவில் ஐபோன் உற்பத்தி அதிகரித்திருந்தாலும், ஐபோன் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களுக்கு நாம் சீனாவைத்தான் நம்பி இருக்கிறோம். அங்கிருந்துதான் முக்கியமான மூலப்பொருட்கள் வருகின்றன. எனவே இந்த நிலைமையை மாற்ற உள்ளூரிலேயே உற்பத்தியை முழுமையாக்க வேண்டும். அப்போதுதான் சீனாவுக்கு போட்டியாக நம்மால் இயங்க முடியும்.
தொழில்நுட்ப துறையில் இப்போதுதான் போட்டி உருவாகியிருக்கிறது. இதனை மற்ற துறைகளுக்கும் விரிவாக்க வேண்டும் எனில், அதற்கான உள்கட்டமைப்புகளை நாம் பலப்படுத்த வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications