பத்து வருட கால ஒத்துழைப்பிற்கு நன்றி – பயனாளிகளுக்கு 'ஆர்குட்' உருக்கமான கடிதம்
நியூயார்க்: சமூக வலைதளங்களுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கிய கூகுளின், ஆர்குட் செப்டம்பருடன் மூடு விழா காண இருக்கிறது.
இந்நிலையில் தன்னுடைய கடைசி செய்தியாக ஆர்குட் அதன் பணியாளர்களுக்கு ஒரு உருக்கமான கடிதத்தை அனுப்பியுள்ளது.
அக்கடிதத்தில், "நம்முடைய 10 வருட காலத்தில் எவ்வளவோ விசயங்களை பகிர்ந்து கொண்டோம், நட்பின் இணைப்புகளை உருவாக்கினோம். ஆனால், தற்போது நாம் ஆர்குட்டிற்கு கடைசி வணக்கம் சொல்லும் நிலையில் உள்ளோம்.

கடந்த பல வருடங்களாக, யூ டியூப், பிளாக்கர், கூகுள் பிளஸ் போன்றவை உலகின் ஒவ்வொரு மூலையையும் இணைக்கும் பணியை செய்து வருகின்றன.
இதனால் ஆர்குட்டின் பலம் குறைந்துவிட்டதாலும், நாங்கள் இந்த வலைதளங்களின் சக்தியை அதிகப் படுத்த உழைக்க வேண்டியுள்ளதாலும் இந்த நிலை உருவாகியுள்ளது.
அதனால், ஆர்குட் வலைதளத்தை வரும் செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் மூட உள்ளோம். ஆர்குட்டிலுள்ள உங்களுடைய பதிவுகளை, புகைப்படங்கள், செய்திகளை கூகுள் டேக்-அவுட் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உங்களுக்கு தேவைப்படவில்லை எனில் கூகுள் பக்கத்தில் இருந்து உங்கள் ஆர்குட் கணக்கை நீக்கிக் கொள்ளலாம்.
கிட்டதட்ட மிக அருமையான பத்து வருடங்கள்....தற்போதும் மிக ஆர்வத்துடன் ஆர்குட் பக்கங்களை உபயோகிப்பவர்களுக்கு எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
வேறு சில சமூகவலைதளப் பக்கங்கள் உங்களுடைய எண்ணங்களை அடுத்தடுத்த காலக்கட்டங்களுக்கு பதிவு செய்யும் என்பதை மனமாற நம்புகின்றோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications