ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: உக்ரைன் மீது போர் தொடுத்தததால், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தன. இதனால் அந்த நாட்டின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தது. இந்தியாவை கூட வாங்கக்கூடாது என்று அமெரிக்கா மிரட்டியது. வரிகளை உயர்த்தி அடாவடியும் செய்தது. ஆனால் இப்போது அமெரிக்கா ஈரான் மீது தொடுத்த போரால் வளைகுடாவில் இருந்து எண்ணெய்யை ஏற்றுமதி செய்வது தடைப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக்கொண்ட ரஷ்யா 64 ஆயிரம் கோடிக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்திருக்கிறது. இது கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் 14 சதவீதம் அதிகம் ஆகும்.

எனக்கு ஒரு கண் போனால், எதிரிக்கு இரண்டு கண்ணும் போகமட்டும் என்று போரிட்டு வருகிறது ஈரான். இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியவை ஈரானை கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல் தாக்கி வருகின்றன. இதனால் பதில் தாக்குதலாக ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகளை தாக்கி வருகிறது. கடுமையான தாக்குதல்களால் ஈரான் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உக்கிரமான ஈரான் வளைகுடா நாடுகளின் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தி மூடியுள்ளது. எங்கே அடித்தால் அமெரிக்காவிற்கு வலிக்கும் என்பதை தெரிந்து இதனை ஈரான் செய்துள்ளது.

Russia iran us india oil


ஹார்முஸ் ஜலசந்தி

உலக அளவில் கடல் வழியாகக் கொண்டு செல்லப்படும் கச்சா எண்ணெய்களில் சுமார் 20% (ஐந்தில் ஒரு பங்கு) இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே செல்கிறது. ஈரான் இதை மூடியுள்ளதால், சவுதி அரேபியா, குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளின் விநியோகம் முடங்கியுள்ளது. அதுமட்டுமல்ல ஈரான் எண்ணெய் வயல்களை அமெரிக்கா தாக்கினால், பதிலுக்கு வளைகுடா மொத்தமும் எண்ணெய் வயல்களை கொளுத்துவோம் என ஈரான் பகிரங்கமாக மிரட்டியும் உள்ளது.

ரஷ்யா நிழற்கடற்படை

இந்த மோதல் ரஷ்யாவுக்குச் சாதகமாக மாறியுள்ளது. ரஷ்யா மேற்கத்திய நாடுகளின் தடையைத் தாண்டியும் எண்ணெய் விற்க ரஷ்யா பழைய கப்பல்களைக் கொண்டு ஒரு தனிப்படையையே உருவாக்கி வைத்துள்ளது. இப்போது வளைகுடா நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால், மற்ற நாடுகளுக்கு வேறு வழியின்றி ரஷ்யாவை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா அனுமதி

ஆரம்பத்தில் ரஷ்ய எண்ணெய் மீது கடும் தடைகளை விதித்த அமெரிக்கா, தற்போது ஈரான் போரினால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 120 டாலர் வரை எகிறியதால், விலையைக் கட்டுப்படுத்த ரஷ்யாவின் சில கப்பல்களுக்குத் தற்காலிகமாக அனுமதியளித்துள்ளது . தற்போது ஹார்முஸ் ஜலசந்தி மூடல் மற்றும் செங்கடல் பகுதியில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, இந்தியாவுக்கு வரும் சரக்குக் கப்பல்களின் காப்பீட்டுச் செலவு மற்றும் போக்குவரத்து கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவும் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கலாம் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

ரஷ்யாவிற்கு என்ன நன்மை

இதனிடையே ஒரு காலத்தில் உக்ரைன் மீது போர் தொடுத்தததால், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தன. இதனால் அந்த நாட்டின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதை பயன்படுத்தி ரஷ்யாவில் இருந்து மானிய விலையில் இந்தியா இறக்குமதி செய்து வந்தது. ஆனால் அதற்கும் அமெரிக்கா கடுமையாக தடை போட்டது. இதனால் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட ரஷ்யாவுக்கு, ஈரான் போர் மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தி உஙள்ளது. பாரசீக வளைகுடாவில் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டதால், கச்சா எண்ணெய் போக்குவரத்து தடைபட்டது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

64000 கோடி லாபம்

இந்த சூழலை பயன்படுத்தி சர்வதேச நாடுகளுக்கு ரஷ்யா கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்து வருகிறது. அந்த நாட்டிடம் இருந்து பல நாடுகள் எண்ணெய் வாங்கி வருகின்றன. இதனால் ரஷ்யா பெருமளவில் சம்பாதித்து வருகிறது. அந்தவகையில் போர் தொடங்கியது முதல் இதுவரை 7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.64 ஆயிரம் கோடி) அளவுக்கு ரஷ்யா கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்துள்ளதாக ஜெர்மனியை சேர்ந்த அர்ஜ்வால்டு அமைப்பு கூறியிருக்கிறது. இது கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் 14 சதவீதம் அதிகம் ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+