உறவினர்கள் எனக்கூறி 200 பேரை காசு கொடுத்து கூட்டி வந்த மாப்பிள்ளை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஷாங்ஸி: சீனாவின் ஷாங்ஸி மாகாணத்தில் மாப்பிள்ளை ஒருவர் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எனக்கூறி 200 பேரை காசு கொடுத்து அழைத்து வந்துள்ளார். தனது உறவினர்கள் ஏழைகளாக இருப்பதால் அவர்களை அழைத்து வர வெட்கப்பட்டு அந்த மாப்பிள்ளை இந்த வேலையை செய்துள்ளார்.

சீனாவின் ஷாங்ஸி மாகாணத்தில் லியு என சர்நேம் கொண்ட ஒரு குடும்பத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணமகன் வீட்டார் என 200 பேர் கலந்து கொண்டனர்.

அவர்கள் மாப்பிள்ளைக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் இருந்தனர். அவர்களின் பேச்சும் மணமகள் வீட்டாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

வந்திருந்தவர்களால் சந்தேகம்

வந்திருந்தவர்களால் சந்தேகம்

இது குறித்து விசாரித்த போது வந்திருப்பவர்கள் அனைவரும் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எனக்கூறி மாப்பிள்ளை சமாளித்துள்ளார். இருப்பினும் சந்தேகம் தீராததால் மணமகள் வீட்டார் வந்திருந்தவர்களிடம் துருவி துருவி விசாரித்தனர்.

நடிக்க வந்தவர்கள்

நடிக்க வந்தவர்கள்

அப்போது மணமகன் வாங்க் உறவினர்கள் நண்பர்கள் என நடிக்குமாறு கூறி அழைத்து வந்ததாக போட்டுடைத்தனர். இதற்காக ஒவ்வொரு நபருக்கும் 12 டாலர்கள் வழங்கியதாகவும் அவர்கள் கூறினர்.

மணமகனை அள்ளிச்சென்ற போலீஸ்

மணமகனை அள்ளிச்சென்ற போலீஸ்

இதையடுத்து திருமணத்தை நிறுத்திய மணமகள் வீட்டார் போலீசில் புகார் அளித்தனர். திருமண மண்டபத்துக்கு வந்த போலீசார மணமகனை அள்ளிச் சென்றது.

தனது குடும்பத்தினர் ஏழை

தனது குடும்பத்தினர் ஏழை

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தனது உறவினர்கள் ஏழைகளாக இருப்பதால் அவர்களை அழைத்து வர மணமகள் விட்டார் ஒப்புக்கொள்ளாததால் இந்த வேலையை பார்த்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் ஏழையாக உள்ள ஒருவர் எப்படி 200 பேருக்கு நடிக்க பணம் கொடுக்க முடியும் என்றும் கேள்வி எழுந்துள்ளது.

அம்பலப்படுத்திய தொலைக்காட்சி

அம்பலப்படுத்திய தொலைக்காட்சி

இந்த தகவல்கள் அம்மாநிலத்தில் உள்ள ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வெளியாகியுள்ளது. மேலும் உறவினர்கள் நண்பர்கள் என நடிக்க வந்தவர்களில் பெரும்பாலனவர்கள் மாணவர்கள் மற்றும் டாக்ஸி டிரைவர்கள் ஆவர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A man in northern China has been arrested on his wedding day after his wife's family realised that the 200 guests he invited from his side as family and friends were paid actors.
Please Wait while comments are loading...