பேசு..பேசு.. லேடி ‘லவ்வர்’ மணிகண்டன்! தினமும் 120 கால்! போலீசுக்கு போன காதலன்! அதென்ன காதல் மூளை?
பீஜிங்: சீனாவில் 'love brain disorder' பிரச்சனையால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் தனது காதலன் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 120க்கும் மேற்பட்ட முறை போன் செய்து தொல்லை செய்ததால் காதலன் காவல் நிலையத்தில் புகார் அளித்த வினோத சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
டாக்சிக் காதலை மையமாகக் கொண்டு பல திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. அந்த வகையில் சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் படத்தில் ரீமாசெனின் கீதா கேரக்டர், சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற லவ்வர் படத்தில் மணிகண்டன் கேரக்டர் 'டாக்ஸிக் லவ்வர்' வகையைச் சேர்ந்தவை தான்

தன்னுடன் பழகும் நபர் அல்லது தனக்கு பிடித்தமான நபர் தனக்கு பிடித்ததை மட்டுமே செய்ய வேண்டும் தன்னுடன் மட்டுமே பேசி பழக வேண்டும் என நினைத்து அவர்களை ஒருவித வன்முறை குணத்தோடு அணுகுவதுதான் 'டாக்ஸிக் காதல்' என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்..
டாக்சிக் காதல்: இது உண்மையிலேயே அதீத காதலால் ஏற்படும் ஒரு வகை மனநிலை குறைபாடு. இது தீர்க்கக் கூடிய குறைபாடு தான்.. படங்களில் மட்டுமல்ல உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. சீனாவைச் சேர்ந்த சியாயு ( Xiaoyu ) என்ற 18 வயது இளம்பெண் தான் படிக்கும் பல்கலைக்கழகத்தில் இளைஞர் ஒருவரை காதலிக்க தொடங்கி இருக்கிறார் அந்த இளைஞரும் காதலை ஏற்றுக் கொள்ள இருவரும் பல இடங்களுக்குச் சென்று தங்கள் காதலை வளர்த்திருக்கின்றனர்.
இளம் பெண்: நாளுக்கு நாள் அந்த இளைஞர் மீதான காதல் ஆழமாக ஒரு கட்டத்தில் அதுவே பெரிய பிரச்சினையாக மாறி இருக்கிறது. தனது காதலன் தன்னைச் சார்ந்தே இருக்க வேண்டும் தன்னுடன் மட்டுமே பேச வேண்டும் என நினைத்த சியாயு தொடர்ந்து தொலைபேசி மூலம் இளைஞரை கால் செய்து தொல்லை செய்ய ஆரம்பித்திருக்கிறார். எங்கே இருக்கிறாய்.., என்ன பண்ற.., யார்கிட்ட பேசிகிட்டு இருக்க.., சாப்டியா என்ன சாப்பிட்ட என தொடர்ந்து ஒரு நாளைக்கு குறைந்தது 100 முதல் 120 முறை தொலைபேசியில் அழைத்து விசாரிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
காதல் தொல்லை: அந்த இளம் பெண்ணின் இந்த செயலானது இருவருக்கும் இடையேயான காதலில் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் காதலன் தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ள முடியாமல் திணறிப் போய் இருக்கிறார். இதையடுத்து அந்த பெண்ணின் அழைப்பை ஏற்கவும் மறுத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் தொலைபேசியை அணைத்து வைக்கும் அளவுக்கு பிரச்சனை சென்றிருக்கிறது. இதனால் ஆத்திரப்பட்ட அந்த இளம் பெண் வீட்டில் உள்ள டிவி பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை உடைத்ததோடு தற்கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார்.
காதல் மூளை: இந்த நிலையில் தான் காதலியின் தொல்லை தாங்க முடியாமல் காவல் நிலையத்தை நாடி இருக்கிறார் அந்த இளைஞர். இதையடுத்து அந்த பெண்ணை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்து மனநல சிகிச்சை கொடுத்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக பேசிய மருத்துவர் லூ நா," காதலில் இருப்போர் எதிர் பாலினத்தவரை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் அவ்வாறு முடியவில்லை என்றால் இதுபோல வெறித்தனமாக நடந்து கொள்வதை "love brain' ( காதல் மூளை ) என மருத்துவ உலகில் பேசப்படுகிறது. ஆனால் இது மருத்துவ சொல் கிடையாது.
மருத்துவர்கள் அறிவுரை: அதே நேரத்தில் காதல் பிரச்சனையால் ஏற்படும் கவலை மனச்சோர்வு போன்ற பிற பிரச்சனைகளுடன் சேர்ந்து இது வெளிப்படுகிறது. குழந்தை பருவங்களில் பெற்றோருக்கு இடையே ஏற்பட்ட சிறு சிறு பிரச்சனைகள் என சந்தித்து வளர்ந்தவர்களுக்கு காதல் மூளை கோளாறு ஏற்படுகிறது. மேலும் ஏற்கனவே மனச்சிதைவு உள்ளவர்களுக்கு காதலின் போது 'டோபமைன்' அதிக அளவில் சுரப்பதாலும் இந்த பிரச்சனை ஏற்படும். எனவே இதுபோன்று பிரச்சனைகளை எதிர்கொள்ளும் காதலர்கள் மருத்துவர்களை சந்திப்பது அவசியம்" என்கிறார்.












Click it and Unblock the Notifications