சிதறி ஓடும் மக்கள்.. இசை நிகழ்ச்சியில் புகுந்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் படையினர்! ஷாக் வீடியோ
இஸ்ரேல்: இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் நேற்று கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர். குறிப்பாக 'சுக்கோட்' விடுமுறையன்று நடத்தப்பட்ட நோவா இசை நிகழ்ச்சியில் இவர்கள் நடத்திய தாக்குதல் தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் நடுவில் உள்ள பகுதிதான் காசா. இதை இஸ்ரேல் கைப்பற்ற முயன்று வருகிறது. ஆனால், பாலஸ்தீனத்தின் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பு இங்கு சுயாட்சியை நடத்தி வருகிறது. இதை இஸ்ரேல் தீவிரவாத அமைப்பாக முத்திரை குத்தியிருக்கிறது. எனவே கடந்த காலங்களில் இதற்கு எதிரான தாக்குதல்களை தீவிரமாக நடத்தியிருக்கிறது. ஹமாஸ் அமைப்பு மட்டுமல்லாது பாலஸ்தீனத்தில் தோன்றிய பல்வேறு ஆயுத இயக்கங்கள் மீது இஸ்ரேல், மேற்கு நாடுகளின் உதவியுடன் ஏகப்பட்ட தாக்குதல்களை தொடுத்திருக்கிறது. ஆனால் ஹமாஸை மட்டும் இன்னும் இஸ்ரேலால் முழுமையாக அழிக்க முடியவில்லை.

இந்த பின்னணியில்தான் நேற்று முன்தினம் காலை ஹமாஸ், பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஒரே நேரத்தில் சுமார் 5000க்கும் அதிகமான ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கியதால் அந்நாடு தற்போது நிலைகுலைந்திருக்கிறது. மட்டுமல்லாது இந்த தாக்குதலின் போது எழுந்த கரும்புகையை பயன்படுத்திக்கொண்டு ஹமாஸ் படையினர் பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் நுழைந்திருக்கின்றனர். மற்றொருபுறம் இஸ்ரேலின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஜீப் மூலம் ஊடுருவியுள்ளார்கள்.
இவர்கள் இஸ்ரேல் மக்கள் மீது சரமாரியான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். குறிப்பாக 'சுக்கோட்' விடுமுறையன்று நடத்தப்பட்ட நோவா இசை நிகழ்ச்சியில் இவர்கள் நடத்திய தாக்குதல் தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகின்றன. சுக்கோட் என்பது யூத மதத்தில் மிகவும் மகிழ்ச்சியான பண்டிகைகளில் ஒன்றாகும். இலையுதிர் அறுவடையைக் கொண்டாடும் விதமாக ஒரு வாரத்திற்கு விடுமுறை விடப்படுகிறது. இந்த நாட்களில் நண்பர்கள், குடும்பங்கள், உறவினர்கள் அனைவரும் சந்தித்துக்கொள்வது வழக்கமாகும். எகிப்தில் அடிமைத்தனத்திலிருந்து தப்பிய யூதர்கள் பாலைவனத்தில் 40 ஆண்டுகள் கழித்ததையும் இந்த விடுமுறை நினைவுகூறுகிறது.
இந்நிலையில் நேற்று இந்த சுக்கோட் விடுமுறையின் கடைசி நாளாகும். எனவே காசாவுக்கு அருகில் கிப்புட்ஸ் ரெய்ம் பகுதியில் 'நோவா' எனும் இசைக்கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 3000க்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் பங்கேற்றிருந்தனர். அந்த சமயத்தில்தான் கச்சேரிக்குள் ஊடுறுவிய ஹமாஸ் படையினர் கண்மூடித்தனமாக தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலிலிருந்து மக்கள் நாலாப்புறமும் சிதறி ஓடும் காட்சிகள் சோஷியல் மீடியாக்களில் வீடியோக்களாக பரவி வருகின்றன. இந்த தாக்குதலில் சுமார் 260 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இசைக்கச்சேரி ஒருபுறம் சிறப்பாக நடந்துக்கொண்டிருக்க அதன் பின் புறத்தில் ஹமாஸ் படையினரின் ஏவுகணைகள் தொடர்ச்சியாக இஸ்ரேலுக்கு பறந்து வருவதை வீடியோவில் தெளிவாக பார்க்க முடிகிறது. இந்த சம்பவத்தின்போது இசை சத்தத்தில் ஏவுகணையின் சத்தம் பெரியதாக கேட்காததால் மக்கள் அதை சரியாக கவனிக்கவில்லை. சிலர் மட்டும் வானத்தை பார்த்த சத்தம்போடுகின்றனர்.
Missiles were seen flying towards the Music Festival in Israel when the Hamas Militants stormed the Israeli territory 🇮🇱🇵🇸#Israel #Palestine #War #Hamas #Rockets #Gaza #Palestinian#TelAviv #IsraelUnderAttack #IDF #Lebanon #Jerusalem #Hezbollah pic.twitter.com/b7rXVavvrI
— T R U T H P O L E (@Truthpole) October 9, 2023
இதே கொஞ்சம் நேரத்திற்கு பின்னர் ஹமாஸ் படையினர் துப்பாக்கியுடன் இசைக்கச்சேரி நடத்த இடத்தில் தாக்குதலை நடத்த தொடங்கிய பின்னர் மக்கள் கூட்டம் கூட்டமாக அஞ்சி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என அனைவரும் தலைதெறிக்க ஓடும் வீடியோவும் பகிரப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு பிறகு இசை கச்சேரி நடந்த பகுதி அப்படியே மயான அமையாக காட்சியளிக்கிறது. பல லட்சம் மதிப்புள்ள கார்களை விட்டுவிட்டு மக்கள் உயிருக்கு பயந்து தப்பி சென்றுள்ளனர். சாலையிலிருந்து அனைத்து வாகனங்களும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
Aftermath of shooting massacre at the Supernova music festival in Israel pic.twitter.com/V6OZ9x7SB8
— News Now 24🌐 (@GlobalNewsNow24) October 8, 2023
இவையெல்லாவற்றிற்கும் உச்சக்கட்டமாக 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் ஹமாஸ் படையினரால் பைக்கில் கடத்தி செல்லப்படும் வீடியோவும் வெளியாகியுள்ளது. ஆக்ரோஷமான போராளிகள் மத்தியில் நிராயுதபாணியாக உள்ள அப்பெண்ணின் காதலன் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார். கடத்தி செல்லப்பட்ட இளம்பெண் 'அர்கமணி' என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறார். அவர் தற்போது என்ன நிலைமையில் இருக்கிறார் என்கிற விவரங்கள் ஏதும் தெரியவில்லை.
Noa was partying in the south of Israel in a peace music festival when Hams terrorists kidnapped her and dragged her from Israel into Gaza.
— Hen Mazzig (@HenMazzig) October 7, 2023
Noa is held hostage by Hamas.
She could be your daughter, sister, friend.#BringBackOurFamily pic.twitter.com/gi2AStVdTQ
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் சண்டையில் இதுவரை 1,100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலில் 700க்கும் அதிகமானோரும், காஸாவில் 413 பேரும் உயிரிழந்துள்ளனர். அதேபோல ஹமாஸ் படையினர் இதுவரை குறைந்தது 100 பணயக்கைதிகளை பிடித்து சென்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications