பாலியல் உறவின் போது காதலன் கொலை.. உடலை துண்டு துண்டாக வெட்டி சாத்தானுக்கு நரபலி கொடுத்த காதலி!
ரஷ்யாவில் பாலியல் உறவின் போது காதலனை கொன்று காதலி ஒருவர் துண்டு துண்டாக வெட்டி நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

மாஸ்கோ: ரஷ்யாவில் பாலியல் உறவின் போது காதலனை கொன்று காதலி ஒருவர் துண்டு துண்டாக வெட்டி நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எவ்வளவுதான் அறிவியலும் பகுத்தறிவும் வளர்ச்சியடைந்தாலும் மக்களிடம் மூட நம்பிக்கைகள் ஒழிந்தபாடில்லை. அதுவும் வளர்ந்த நாடுகளில் இளசுகள் மத்தியில் பரவும் மூட நம்பிக்கைகள் அதிர வைக்கிறது.
குறிப்பாக நரபலி உள்ளிட்ட விவகாரங்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவில் 21 வயது இளம் பெண் ஒருவர் தனது காதலனை துண்டு துண்டாக வெட்டி நரபலி கொடுத்த சம்பவம் பீதியை கிளப்பியுள்ளது.

காதலர்கள்
ரஷ்யாவின் ஒர்யோல் எனும் பகுதியில் வசித்து வருபவர் அனஸ்தேசியா ஒனிகினா. 21 வயதான இந்த இளம் பெண்ணும் முன்னாள் போலீஸ் அதிகாரியான டிமிட்ரி சிங்கேவிச் என்ற 24 வயது நபரும் காதலித்து வந்தனர்.

பாலியல் உறவின் போதே..
இந்நிலையில் ஒனிகினா காதலரை தனது வீட்டிற்கு அழைத்து பாலியல் உறவு கொண்டுள்ளார். அப்போது திடீரென காதலரின் ஆணுறுப்பை வெட்டிய அவர் கட்டிலில் வைத்தே அவரை கொன்று துண்டு துண்டாக வெட்டியுள்ளார்.

பாதி பிரீசரில் மீதி குப்பையில்
விரல்கள், கன்னங்கள், கைகள், கால்கள் என காதலனின் உடலை மிக கொடூரமான முறையில் துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜின் பிரீசர் பகுதியில் பாதி உறுப்புகளை வைத்திருந்தார். மீதியை குப்பை தொட்டியில் போட்டுள்ளார்.

காதலியிடம் விசாரணை
டிமிட்ரி திடீரென மாயமானதால் போலீசார் காதலி ஒனிகினாவிடம் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து குப்பையில் வீசப்பட்டிருந்த உடல்பாகங்களை கைப்பற்றிய போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

சாத்தானின் உருவ அமைப்பு
ஆரம்பத்தில் காவல்துறையினரிடம் தனது குற்றத்தை ஒப்பு கொள்ளாத ஒனிகினா அதன் பின் தான்தான் கொலை செய்ததாக ஒப்பு கொண்டார். சாத்தானின் உருவ அமைப்போடு டிமிட்ரியின் உருவ அமைப்பு ஒத்து போனதால் அதே முறையில் கொல்ல நினைத்ததாக கூறியிருக்கிறார் ஒனிகினா.

உளவியல் பரிசோதனை
சாத்தான் விரல்கள் போல டிமிட்ரியின் விரல்களை துண்டித்ததாக கூறினார். இந்த கொலை சம்பந்தமாக தற்போது குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் ஒனிகினா உளவியல் பரிசோதனையில் உள்ளார்.

போலீசார் சந்தேகம்
இந்த கொலைக்கு அவர் மட்டுமே காரணமாக இருக்க முடியாது வேறு சிலர் இதற்கு அவருக்கு உதவி செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்க படுகிறது. இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதிர்ச்சி
இளம்பெண் ஒருவர் தனது காதலனை சாத்தானோடு ஒப்பிட்டு கொடூரமான முறையில் கொன்று நரபலி கொடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications