சுவிட்சர்லாந்தில் ஆடிப்பூரம்... ஞானலிங்கேஸ்வரத்தில் அன்னைக்கு வளைகாப்பு
பேர்ன்: ஞானலிங்கேச்சுரத்தில் நடைபெற்ற கடகத் திங்கள் ஆடிப்பூர பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று இறையருள் பெற்றனர். அன்னைக்கு சீர் கொண்டு வந்து வளைகாப்பு நடத்தப்பட்டப்பட்டது.
ஆடி மாதம் நடைபெறும் ஆடிப்பூரம் விழா தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்னர் வெகு விமரிசையாக கொண்டாப்பட்டது. அன்னைக்கு சீர் கொண்டு வந்து வளைகாப்பு நடத்தினர்.
இதே போல சுவிட்சர்லாந்தின் தலைநகர் பேர்ன் மாநிலத்தில் 05. 08. 2016 அன்று ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரத்தில் கடகத்திங்கள் திருக்கணைப் பெருவிழா (ஆடிப் பூரம்) மிகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
108 திருச்சங்குத் திருமுழுக்கு எம்பெருமானிற்கும் ஞானாம்பிகைத் தாய்கும் அடியார்கள் திருக்கரங்களால் ஆற்றப்பட்டது.

ஞானாம்பிகை
சிறப்பு வழிபாடுகளைத் தொடர்ந்து அன்னைக்கு அன்னையர்கள் சீர்எடுத்துவர விரைல மலலர் குழல் வல்லி, மறைமலர் பதலவல்லி, கற்பகவல்லி ஞானாம்பிகைக்கு இறை திருமஞ்சள் நீராட்டுப்பெருவிழா நடைபெற்றது.

வளைகாப்பு
உலக உயிர்கள் யாவற்றையும் படைத்துக் காக்த்துக் கரந்து விளையாடும் உலகாண்ட நாயகிக்கு இளந்தமிழ்ச் செல்வங்கள் ஆலவட்டம் வீச, மஞ்சள்காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு, நடைபெற்று வளையல் அணிவிக்கப்பட்டது.

காந்திமதியாக காட்சி
அண்டத்தையும் விண்டத்தையும் படைத்தருளும் அன்னை இன்று சுவிட்சர்லாந்து நாட்டில் நெல்லையப்பர் ஒரு பாகமான காந்திமதித் தாயாக அருட்காடச்சி அளித்தாள். பெண் பக்தர்கள் அம்மன் சப்பரத்தை தாங்கி வலம் வந்தனர்.

இறைவன் அருள்
வழிபாடுகளைத் தொடர்ந்து, லவுசான் மாநகரில் இருந்து வருகை தந்திருந்த இளந்தமிழ்ச் செல்வியின் வீணை இசை நிகழ்வு கலைமகள் அருள்பொழிய இனிதே நடந்தேறிற்று. நிறைவில் அடியார்களுக்கு அருளமுது வழங்கி மகேச்சுர வழிபாட்டுடன் திருநாள் நிறைவுற்றது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications