Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வலுக்கட்டாயமாக குடிக்க வைக்கப்பட்டாரா சோனாலி போகட்? சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

பானாஜி: நடிகை சோனாலி போகட் மர்ம மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நைட் கிளப்பில் சோனாலி போகட்டுக்கு வலுக்கட்டாயமாக மதுவை குடிக்க வைப்பது போன்ற சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த நடிகை சோனாலி போகட். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் 2 பேருடன் கோவா சென்றிருந்தார்.

இந்த நிலையில் கடந்த 22-ஆம் தேதி சோனாலி போகட் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்டது.

குளிர்பானத்தில் போதைப்பொருள்...

குளிர்பானத்தில் போதைப்பொருள்...

இதற்கிடையே கோவாவிற்கு சோனாலி போகட்டுடன் சென்றிருந்த இருவர் தான் கொலை செய்திருப்பதாக அவரது சகோதரர் போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் சுதிர் சக்வான், சுக்விந்தர் வாசி ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் கோவாவில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் நடந்த ஒரு பார்ட்டியின் போது சோனாலி போகட்டுக்கு குளிர்பானத்தில் போதைப்பொருளை கலந்து கொடுத்ததாக கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு

இதற்கிடையே சோனாலி போகட்டின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில், சோனாலி போகட்டின் உடலில் ரத்த காயங்கள் அல்லாத தாக்குதல் நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் போலீசார் மேற்கண்ட இருவரையும் கைது செய்யவில்லை. இதனால் இந்த விவாகாரம் குறித்து பாஜக கூட்டணி கட்சிகள் மீது எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். மேலும் இந்த வழக்கில் உடனடியாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தின.

போலீசுக்கு முழு சுதந்திரம்

போலீசுக்கு முழு சுதந்திரம்

இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் இந்த வழக்கை விசாரிக்க போலீசுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்திருந்தார். எனினும் அவர் எப்படி உயிரிழந்தார் என்பது மர்மமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் சோனாலி போகட்டுக்கு மதுவை வலுக்கட்டாயமாக குடிக்க வைப்பது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வலுக்கட்டாயமாக குடிக்க வைக்கிறார்

வலுக்கட்டாயமாக குடிக்க வைக்கிறார்

நைட் கிளப்பில் சோனாலி போகட் வலுக்கட்டாயமாக மதுவை குடிக்க வைப்பது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைட் கிளப்பில் அனைவரும் நடனமாடி கொண்டு இருக்கும் நேரத்தில் சோனாலி போகட் அருகில் நிற்கும் ஒரு நபர் அவரை வலுக்கட்டாயமாக குடிக்க வைக்கிறார். அந்த நபர் சுதிர் சங்க்வான் போல தெரிகிறது. இந்த பதிவுகளை வைத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள்

அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள்

இது குறித்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், நைட் கிளப் உள்பட சம்பந்தப்பட்ட வளாகங்களில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், சுதிர் என்ற நபர் சோனாலிக்கு வாட்டர் பாட்டிலில் உள்ள திரவம் ஒன்றை வலுக்கட்டாயமாக குடிக்க வைக்கும் காட்சிகள் பதிவாகியிருக்கின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சோனாலி போகட் மரணம் தொடர்பாக அடுத்தடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் பெரும் பரபரபரப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+