விவாகரத்தாகி 50 ஆண்டுகளுக்குப் பின் பேரன்கள் முன்னிலையில் மறுமணம் செய்யும் தாத்தா-பாட்டி!
அமெரிக்காவில் விவாகரத்தான தம்பதி ஒன்று 50 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மறுமணம் செய்து கொள்ள உள்ளனர்.
நியூயார்க்: அமெரிக்காவில் விவாகரத்தாகி 50 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் பேரன், பேத்திகள் முன்னிலையில் வயதான தம்பதி ஒன்று மறுமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர் .
அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தைச் சேர்ந்தவர் ஹோலண்ட் (83). கடந்த 1955ம் ஆண்டு இவருக்கும் பார்ன்ஸ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஐந்து குழந்தைகளைப் பெற்று சந்தோசமாக வாழ்ந்து வந்த இந்தத் தம்பதி, கடந்த 1967ம் ஆண்டு கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்ற இவர்கள், தனித்தனியே மறுமணமும் செய்து கொண்டனர்.

பிரிந்து வாழ்ந்த போதும் இரண்டு குடும்பத்தினரும் நண்பர்களாகவே வாழ்ந்து வந்துள்ளனர். எதிர்பாராதவிதமாக இருவருமே கடந்த 2015ம் ஆண்டு தங்கள் துணையை இழந்தனர்.
மகன், மகள்கள் எல்லாம் திருமணமாகி சென்றுவிட, தனிமையில் வாழ்ந்து வந்த இருவருக்கும் ஒரு துணை தேவைப்பட்டது. எனவே, மீண்டும் திருமணம் செய்து கொள்ள அவர்கள் முடிவு செய்தனர்.
இது தொடர்பாக இரண்டு குடும்பத்தினரிடம் அனுமதி பெற்றனர். அதன் தொடர்ச்சியாக வரும் 14ம் தேதி இருவருக்கும் திருமணம் செய்து வைக்க அவர்களது குடும்பத்தார் திட்டமிட்டுள்ளனர். அமைச்சராக உள்ள அவரது பேரன் இந்தத் திருமணத்தை நடத்தி வைக்க இருக்கிறார்.
“கடைசி காலத்தை நாங்கள் இருவரும் ஒன்றாக கழிக்க விரும்புகிறோம்” என இத்திருமணம் குறித்து ஹோலன்ஸ் - பார்ன்ஸ் ஜோடி கூறுகின்றனர்.
50 ஆண்டுகள் கழித்து மறுமணம் மூலம் மீண்டும் கணவன் - மனைவியாகப் போகும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications