இந்தியா சொன்ன ஒரு வார்த்தை.. இறங்கியடித்த இலங்கை! எதிர்பார்த்து ஏமாந்த பாகிஸ்தான்.. பரபரப்பு தகவல்
கொழும்பு: பாகிஸ்தான் கடற்படையும், இலங்கை கடற்படையும் சேர்ந்து திரிகோணமலை கடற்பகுதியில் கூட்டு பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து இந்தியாவுக்காக, பாகிஸ்தான் கடற்படையின் கூட்டு பயிற்சியை இலங்கை அதிரடியாக ரத்து செய்து அறிவித்துள்ளது. இதன் பின்னணி குறித்த விபரம் வருமாறு:
நம் நாட்டுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பிரச்சனை உள்ளது. மாறாக நமக்கும், இலங்கைக்கும் இடையேயான உறவு என்பது பாகிஸ்தானை ஒப்பிடும்போது மிக சிறப்பானதாகவே இருக்கிறது. சமீபத்தில் கூட பிரதமர் மோடி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக்கவை சந்தித்து பேசினார். அப்போது இருநாடுகள் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது ‛‛இந்தியாவின் பாதுகாப்புக்கும், பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைக்காக பிறநாடுகள் இலங்கையை பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம்'' என்று கூறியிருந்தார்.
இலங்கை - சீனா இடையே நல்ல உறவு உள்ளது. இதனால் அடிக்கடி சீனா உளவு கப்பல்கள் இலங்கை கடல் எல்லைக்கு வந்து செல்கின்றன. இதன்மூலம் சீனா நாட்டை உளவு பார்க்கலாம் என்ற அச்சம் உள்ளது. இப்படியான சூழலில் இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக்கவின் இந்த உறுதிமொழி நம் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளதாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே தான் இலங்கையின் திரிகோணமலை கடற்பகுதியில் இலங்கை - பாகிஸ்தான் நாடுகள் இடையே கடற்படைகள் கூட்டுப்பயிற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. பாகிஸ்தானுக்கும், நமக்கும் ஏற்கனவே பஞ்சாயத்து உள்ளது. அதோடு இலங்கையின் வடகிழக்கு கடலோர பகுதியாக திரிகோணமலை உள்ளது. மேலும் திரிகோணமலை என்பது நம் நாட்டுக்கு அருகே உள்ளதோடு நம் நாட்டின் கடல்சார் பாதுகாப்பு நலன்களுக்கு முக்கிய மையமாக கருதப்படுகிறது.
இதனால் நம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் எழுந்தன. இதனால் இந்த பயிற்சியை நம் நாடு விரும்பவில்லை. இதுபற்றி இலங்கைக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து திரிகோணமலையில் இலங்கை - பாகிஸ்தான் படைகள் மேற்கொள்ள இருந்த கடற்படை பயிற்சி அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதோடு பிரதமர் மோடியின் சமீபத்திய இலங்கை பயணத்தின் போது திரிகோணமலையை எரிசக்தி மையமாக மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் கையெழுத்திட்டன. இந்த திட்டம் என்பது இலங்கையின் பொருளாதாரத்துக்கு மிகவும் முக்கியமான திட்டமாகும். இதனால் இலங்கைக்கு, இந்தியா மிகவும் முக்கியமான பார்ட்னராக உள்ளது.
பாகிஸ்தான் - இலங்கை கடற்படைகள் இடையே நல்லுறவு என்பது உள்ளது. இருநாடுகளின் போர்க்கப்பல்களும் ஒன்றிணைந்து அவ்வப்போது கூட்டு கடற்பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. இப்படியான சூழலில் இந்தியாவுக்காக பாகிஸ்தான் உடனான கடற்படை கூட்டு பயிற்சியை இலங்கை அதிரடியாக ரத்து செய்துள்ளது.
முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீன ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான "யுவான் வாங்" நிறுத்தப்பட்டது. இது நம் நாட்டின் பாதுகாப்பு மீதான கேள்வியை எழுப்பியது. அதன்பிறகு 2023ல் கொழும்பு துறைமுகத்தில் இன்னொரு சீன போர்க்கப்பலும் நிறுத்தப்பட்டது. இது இந்தியா - இலங்கை இடையே மோதலை தூண்டியது. ஆனால் இப்போது இந்தியாவை சீண்டும் வகையில் பாகிஸ்தானுடன் கூட்டு பயிற்சி நடத்த வேண்டாம் என்று இலங்கை தவிர்த்துள்ளது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
-
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
இந்தியா உட்பட.. உலகம் முழுவதும் x தளம் முடங்கியது! கோடிக்கணக்கான பயனர்கள் தவிப்பு! -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
இந்தியாவின் நிலைமை மோசமாக போகுது! டிரம்ப் பார்த்த வேலையால் வந்த வினை! இப்படியா சிக்கல் வரனும்! -
தொங்கு சந்தையான பங்கு சந்தை.. 1200000000000 ரூபாய் பாழாப் போச்சு! மண்ணை அள்ளிப் போட்ட ஈரான் போர்! -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
இந்திய கப்பல்களுக்கு மட்டும் வழிவிடும் ஈரான்.. தமிழகத்திற்கு கிடைத்த மெகா நல்ல செய்தி.. சூப்பர்ல -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம்












Click it and Unblock the Notifications