For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காற்றில் கொரோனா பரவுவது உண்மைதான்.. எப்படி என நிரூபித்த சீனா.. பேருந்தில் நடந்த ஷாக்!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் பேருந்தில் பயணித்த ஒரு நபர் மூலம் அந்த பேருந்தில் இருந்தவர்களில் 23 பேருக்கு கொரோனா பரவி இருப்பது தெரியவந்துள்ளது. இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால் காற்றில் கொரோனா பரவி இருப்பதுதான். இது தொடர்பான ஆய்வு ஜமா நெட்வொர்க் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றால இந்த 10 மாதங்களில் 2.7 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகிவிட்டனர். தினமும் பல்லாயிரம் இந்தியாவில் மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலகம் முழுவதும் பல லட்சம் என்கிற அளவில் பாதிப்பு உள்ளது.

கொரோனா தொற்று காற்றிலும் பரவும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் உலக சுகாதார அமைப்பு ஒப்புக்கொண்டது. இந்நிலையில் சீனாவில் இது தொடர்பான ஆய்வு முடிவு ஒன்று அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

கொரோனா பாதிப்பு.. மின்னல் வேகத்தில் 40 லட்சத்தை எட்டிய இந்தியா!.. ஷாக் தகவல் கொரோனா பாதிப்பு.. மின்னல் வேகத்தில் 40 லட்சத்தை எட்டிய இந்தியா!.. ஷாக் தகவல்

128 பயணிகள் பயணம்

128 பயணிகள் பயணம்

சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் ஜனவரி 19, 2020 அன்று 128 நபர்கள் இரண்டு பேருந்துகளில் சென்றிருக்கிறார்கள். பேருந்து ஒன்றில் 60 பேரும் , பேருந்து இரண்டில் 68 பேரும் பயணித்துள்ளனர். இந்த பேருந்துகளில் பயணித்தவர்கள் 100 நிமிடம் பேருந்தில் பயணித்துள்ளார்கள். 150 நிமிடம் வழிபாட்டு நிகழ்வில் பங்கேற்றுள்ளார்கள்.

இரண்டும் ஏசி பேருந்து

இரண்டும் ஏசி பேருந்து

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி பேருந்து இரண்டில் பயணித்துள்ளார். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் இரண்டு பேருந்துகளிலும் ஏர் கண்டிஷனர்கள் (ஏசி வசதி) செயல்பட்டன. இந்த 128 நபர்களில், 15 ஆண்கள், 113 பெண்கள் இருந்தனர். இதில் சராசரி வயது 58.6 வயதுடையவர்களாக இருந்தனர்.

ஒருவர் மூலம் பரவல்

ஒருவர் மூலம் பரவல்

பேருந்து இரண்டில் பயணித்தவர்களில் 24 பேர் கொரோனா நோயாளிகளாக மாறி இருக்கிறார்கள். பேருந்து ஒன்றில் இருந்த யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
பேருந்து ஒன்றில் இருந்த நபர்களுடன் ஒப்பிடும்போது பேருந்து இரண்டில் இருந்த நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுதற்கான வாய்ப்பு 34.3 சதவீதம் அதிகமாக இருந்ததாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Recommended Video

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த கசாயத்தை குடிங்க.. ஆயுர்வேத டாக்டர் கவுதமன் சொன்ன சூப்பர் அட்வைஸ்
    மற்றவர்கள் பாதிப்பு

    மற்றவர்கள் பாதிப்பு

    பேருந்து இரண்டில் 15 வரிசைகளில் இருக்கைகள் இருந்தன, ஒவ்வொரு வரிசையிலும் ஒரு பக்கத்தில் மூன்று இடங்களும் மறுபுறம் இரண்டு இருக்கைகளும் இருந்தன. கொரோனா நோயாளி எட்டாவது வரிசையின் மூன்று இருக்கைகள் பக்கத்தில் நடுத்தர இருக்கையில் அமர்ந்திருந்தார். கொரோனா நோயாளிக்கு அருகில் அமர்ந்திருந்தவர்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், மற்ற கேஸ்கள் பஸ் முழுவதும் பரவியிருந்தன. குறிப்பிடத்தக்க வகையில், கொரோனா நோயாளியின் அருகில் அமர்ந்திருக்கும் பயணிகளைத் தவிர, பஸ்ஸின் ஜன்னலுக்கு அருகில் இருக்கைகளில் அமர்ந்திருந்த பயணிகள் யாரும் தொற்றுநோயால் பாதிக்கப்படவில்லை.

    English summary
    A new study published in the journal JAMA Network suggests airborne transmission in a bus in China led to one infected individual spreading of COVID-19 to 23 other fellow passengers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X