இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக இருந்தவர்.. காஷ்மீர் விஷயங்களில் தலையிட்டவர்.. அல்கொய்தா ஜவாஹிரி பின்னணி

Subscribe to Oneindia Tamil

காபூல்: அல் கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி ஆப்கானிஸ்தான் காபூல் நகரில் அமெரிக்க டிரோன் தாக்குதலில் கொலை செய்யப்பட்டார். இவர் இந்தியாவுக்கும் பெரும் அச்சுறுத்திய நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டதோடு, ஹிஜாப் விவகாரத்தில் ‛‛அல்லாஹு அக்பர்' என கோஷமிட்ட கர்நாடக மாணவியை பாராட்டி கவிதையில் வாழ்த்தி இருந்த நிலையில் தற்போது கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஒசாமா பின்லேடன் மறைவுக்கு பிறகு அல் கொய்தா தலைவராக தேர்வானவர் தான் அய்மன் அல் ஜவாஹிரி. 71 வயது நிரம்பிய இவர் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பதுங்கி இருந்தார்.

இந்நிலையில் தான் நேற்று அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் அய்மன் அல் ஜவாஹிரி கொலை செய்யப்பட்டார். அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதல் உள்பட நாட்டின் பல்வேறு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட நிலையில் தற்போது வீழ்த்தப்பட்டுள்ளார்.

இந்தியாவையும் அச்சுறுத்திய அய்மன்

இந்தியாவையும் அச்சுறுத்திய அய்மன்

இந்நிலையில் தான் அய்மன் அல் ஜவாஹிரி இந்திய விவகாரங்களிலும் தலையிட்டு அச்சுறுத்தி வந்துள்ளார். பின்லேடன் மறைவுக்கு பிறகு 2011ம் ஆண்டு முதல் பல்வேறு விவகாரங்களில் அய்மன் அல் ஜவாஹிரி இந்திய விஷயங்களில் தலையிட்டுள்ளார். பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து, அந்நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்த அய்மன் அல் ஜவாஹிரி இந்தியாவின் காஷ்மீர் விவகாரம் மற்றும் கர்நாடகத்தில் எழுந்த ஹிஜாப் பிரச்சனை குறித்தும் பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார். குறிப்பாக இந்திய துணைக்கண்டத்தில் அய் கொய்தாவுக்கு புத்தூயிர் ஊட்ட வேண்டும் என பலமுறை கூறியிருந்தார்.

காஷ்மீர் பற்றி பேசியது என்ன?

காஷ்மீர் பற்றி பேசியது என்ன?

2014 மற்றும் 2022ல் அவர் இந்தியா குறித்த பேசி வீடியோக்களை வெளியிட்டார். 2014ல் அவர் வெளியிட்ட வீடியோவில், ‛‛இந்திய துணைக்கண்டத்தில் ஜிஹாத் தளத்தின் அமைப்பு" உருவாக்கப்படும். இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சகோதரர்களை அல் கொய்தா மறக்கவில்லை. ஜிஹாதிகள் பிரிட்டிஷ் இந்தியாவின் எல்லைகளை உடைப்பார்கள். இதற்காக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். பர்மா, காஷ்மீரில் உள்ள முஸ்லிம் சகோதர்களுக்கு அநீதி மற்றும் ஒடுக்குமுறையில் இருந்து விடுவிப்போம்'' என கூறியிருந்தார்.

ஹிஜாப் மாணவியை பாராட்டி கவிதை

ஹிஜாப் மாணவியை பாராட்டி கவிதை

அதன்பிறகு 2022ல் ஏப்ரலில் கர்நாடகம் மாநிலத்தில் எழுந்திருந்த ஹிஜாப் பிரச்சனை பற்றி பேசியிருந்தார். இதுதொடர்பாக அந்த அமைப்பின் அஸ் ஷபாப் ஊடகத்தால் 9 நிமிட வீடியோ வெளியாகி உள்ளது. அதில், அய்மன் அல் ஜவாஹிரி ஹிஜாப் தொடர்பான அடக்குமுறைக்கு எதிர்வினையாற்ற வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். மேலும் ‛அல்லாஹு அக்பர்' என கோஷமிட்ட கர்நாடக மாநிலம் மண்டியாவை சேர்ந்த மாணவி முஸ்கானை அவர் பாராட்டினார். ‛இந்தியாவின் உன்னத பெண்' என எழுதப்பட்ட ஒரு போஸ்டருடன் அவர் பாராட்டினார்.

 கவிதை நடையில் பாராட்டு

கவிதை நடையில் பாராட்டு

மேலும் இந்த மாணவி குறித்து சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியாகின. இதை பார்த்து தான் அவரது துணிவு குறித்து அறிந்து வியந்தேன். இதனால் தான் கவிதை எழுதி பாராட்ட முடிவு செய்தேன். நான் கவிஞனாக இல்லாவிட்டாலும் அவருக்காக கவிதை எழுதியுள்ளேன். இதனை அவர் ஏற்றுக்கொள்வார் என கூறியிருந்தார். இதுவும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் தான் அவர் தற்போது ஆப்கானிஸ்தானின் காபூலில் ட்ரோன் தாக்குதல் மூலம் வீழ்த்தப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+