உலகிலிருந்தே காணாமல் போகும் தென்கொரியா? இப்படி கூட பிரச்சனை வருமா! சமாளிக்க வழிகளை தேடும் கொரிய அரசு
சியோல்: தென்கொரியா என்றாலே அதன் அதிநவீன தொழில்நுட்பமும் பொருளாதார வளர்ச்சியும் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், இப்போது தென் கொரியா இதுவரை இல்லாத வகையில் கருவுறுதல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.. அங்கு மக்கள் தொகை படுவேகமாக சரியும் நிலையில், அதைச் சரி செய்ய முடியாமல் தென்கொரிய அரசு போராடி வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் தென்கொரியா என்ற நாடே இல்லாத சூழல் கூட உருவாகும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த நூற்றாண்டில் இந்தியா, சீனா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளுக்கும் மக்கள்தொகை வளர்ச்சி தான் மிகப் பெரிய பிரச்சினையாக இருந்தது. மக்கள்தொகை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

கொரியா: ஆனால், இந்த நூற்றாண்டில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. மக்கள்தொகை சரிவு உலகின் பல நாடுகளுக்குப் பிரச்சினையாக மாறியுள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக தென்கொரியா இருக்கிறது. அதிநவீன தொழில்நுட்பத்திற்குப் பெயர் போன தென்கொரியாவில் இந்த பிரச்சினை ஏற்பட்டது எப்படி.. இதற்குப் பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன என்பதை நாம் பார்க்கலாம்.
தொடக்கம் எது: கடந்த 1960களில், தென் கொரியாவின் மக்கள்தொகை பொருளாதார முன்னேற்றத்தை விட வேகமாக வளர்ந்து கொண்டு இருந்தது. இதனால் எங்கு தென்கொரியாவில் மிகப் பெரிய பிரச்சினை ஏற்படுமோ என்று அஞ்சி அப்போதே தென்கொரிய அரசு குடும்ப கட்டுப்பாட்டுக் கொள்கையைக் கொண்டு வந்தது. குழந்தை பிறப்பு விகிதங்களைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
அந்த காலகட்டத்தில் தென் கொரியாவின் தனிநபர் வருமானம் என்பது உலக சராசரியில் 20 சதவீதமாக மட்டுமே இருந்தது. அதேநேரம் ஒரு பெண் சராசரியாக 6 குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுத்து வந்தனர். இதன் காரணமாகவே அப்போதைய தென்கொரிய அரசு குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைக் கொண்டு வந்தது. இதற்கு நல்ல பலனும் கிடைத்தது.
தொடர் சரிவு: 1980களில் தென்கொரியப் பொருளாதாரம் நல்ல நிலையை அடைந்துவிட்டது. 1983ம் ஆண்டு தென் கொரியாவின் கருவுறுதல் விகிதம் சரியாக 2.1ஐ எட்டியது. தென்கொரியா அரசு எதிர்பார்த்த பிறப்பு விகிதம் இந்த 2.1தான். ஏனென்றால் சரியாக இந்த பிறப்பு விகிதம் இருந்தால் தான் மக்கள் தொகை அதிகரிக்கவும் செய்யாது.. குறையவும் செய்யாது. எனவே, குழந்தை பிறப்பு விகிதத்தை இதே நிலையில் வைத்திருக்கவே அந்நாட்டு அரசு திட்டமிட்டது.
இருப்பினும், அது தொடர்ந்து குறைந்து வந்தது. முதலில் அது மெல்லவே குறைந்தது. இதனால் அதைப் பெரிய பிரச்சினையாக அரசு கருதவில்லை. ஆனால், சமீப காலங்களில் வரலாற்றில் இல்லாத அளவுக்குப் பிறப்பு விகிதம் குறைந்து மிகப் பெரிய நெருக்கடியாக மாறியுள்ளது. இப்போது தென்கொரிய 5.2 கோடி மக்கள்தொகையுடன் வலுவாக இருந்தாலும் இந்தாண்டு இறுதிக்குள் அது 1.7 கோடியாகக் குறையும் என்று அஞ்சப்படுகிறது. இதே நிலை நீடித்தால் தென்கொரியா என்ற நாடே இல்லாத சூழல் கூட உருவாகும்.
எல்லா வழிகளையும் யோசிக்கும் கொரிய அரசு: இந்த ஆபத்தை உணர்ந்து தான் தென்கொரிய அரசு மக்கள்தொகையை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிகம் குழந்தை பெறுவோருக்கு வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வளவு ஏன்.. அங்கு ஆண்கள் கட்டாயமாக ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்ற விதி இருக்கும் நிலையில், 30 வயதுக்குள் 3 குழந்தைகளுக்குத் தந்தையானால் கட்டாய ராணுவ பயிற்சியில் இருந்து கூட விலக்கு தருவது குறித்து அந்நாட்டு அரசு ஆலோசித்து வருகிறது.
என்னதான் இவ்வளவு சலுகைகளைக் கொரியா வாரி வழங்கினாலும், அங்குள்ள அடுத்த தலைமுறையினர் குழந்தை பெற்றுக் கொள்வதில் சுத்தமாக ஆர்வம் காட்டுவது இல்லையாம். குழந்தை பெற்றெடுத்தால் தங்கள் கேரியர் பாதிக்கப்படும் என்று இளம்பெண்கள் பலரும் கருதுகிறார்கள். அதேபோல குழந்தை வளர்க்க ஆகும் செலவும் பெரிய சிக்கலாக இருக்கிறது. இது போன்ற பிரச்சினைகளால் தென்கொரிய நிலைதடுமாறிப் போய் இருக்கிறது. இந்த சிக்கலைச் சரி செய்ய முடியாவிட்டால் தென்கொரிய அரசு நிச்சயம் அழிவையே சந்திக்கும் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications