டிப்ஸ் தரக் காசில்லாமல் ஐன்ஸ்டின் எழுதிய குறிப்புகள்: 17.4 லட்சம் டாலருக்கு ஏலம்
கொரியர் அஞ்சல் கொண்டுவந்தவருக்கு டிப்ஸ் கொடுக்க காசில்லாமல் புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின் எழுதிக் கொடுத்த இரண்டு குறிப்புகள் 17.4 லட்சம் அமெரிக்க டாலருக்கு ஏலம் போனது.
1922-ம் ஆண்டில் எழுதப்பட்ட இந்தக் குறிப்புகளில் ஒன்றில் எப்படிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமையும் என்பது பற்றிய தமது கருத்தை எழுதியிருந்தார் ஐன்ஸ்டின்.
ஜெர்மனியில் பிறந்து, நோபல் பரிசு பெற்றவரான ஐன்ஸ்டின் அப்போது ஓர் உரையாற்றுவதற்காக ஜப்பான் சென்றிருந்தார். அப்போது அவருக்கு வந்தக் கடிதம் ஒன்றை அவரது ஓட்டல் அறைக்கு கொண்டுவந்த கொரியர் ஊழியருக்கு டிப்ஸ் தருவதற்கு அவரிடம் காசு ஏதுமில்லை.
எனவே, அவர் தங்கியிருந்த டோக்கியோ இம்பீரியல் ஓட்டலின் குறிப்புத் தாளில் இரண்டு சிறு குறிப்புளை எழுதி, கையெழுத்திட்டு அந்த ஊழியரிடம் தந்தார்.
- நவம்பர் 7-ல் 2ஜி வழக்கு தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும்: சிபிஐ நீதிமன்றம்
- யார் அழகு? தமிழ் ஆண்களா, மலையாள ஆண்களா?
அந்தக் குறிப்புகளைத் தந்துவிட்டு, "உனக்கு அதிருஷ்டம் இருந்தால் இது மதிப்பு மிக்கதாகும்," என்று சொன்னார் ஐன்ஸ்டின்.
குறிப்பில் என்ன எழுதினார்?
"வெற்றியைத் தேடும் வாழ்க்கையில் எப்போதும் அமைதியின்றி தவிக்கும் நிலை இருக்கும். அமைதியான பணிவான வாழ்க்கை மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்," என்று ஒரு குறிப்பில் எழுதியிருந்தார் ஐன்ஸ்டின். இந்தக் குறிப்பு 15 லட்சம் அமெரிக்க டாலருக்கு ஏலம் போனது.
இன்னொரு குறிப்பில் "மனமிருந்தால் மார்க்கமுண்டு" என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். இந்தக் குறிப்புத் தாள் 2.4 லட்சம் அமெரிக்க டாலர்கள் ஏலம் போனது.
இரண்டு குறிப்புத் தாள்களும் ஏலத்துக்கு முன்னதாக மதிப்பிட்டிருந்த தொகையைவிட அதிக தொகைக்கு ஏலம் போயின என்று 'வின்னர்' ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்புகளைப் பெற்ற ஏல ஊழியரின் உறவினர் இந்தக் கடிதத்தை விற்பனை செய்தார். இக் குறிப்புகளை வாங்கிய ஐரோப்பியர் தமது பெயர் வெளியாவதை விரும்பவில்லை என்று ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
- என்னை வளைக்க முடியவில்லை என்ற ஆத்திரத்தில் அபாண்டமாக பேசுகிறது பாஜக: திருமாவளவன்
- ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்
- வாதம்-விவாதம்: இறந்தவர்களுக்கு மட்டும்தான் பேனரா?
- "தேசிய கீதத்துக்கு நிற்பதைவிட ஊழல்வாதிகளுக்கு வாக்களிக்காமல் இருப்பதே தேசபக்தி"
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!














Click it and Unblock the Notifications