For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க அரசியலில் புயல் கிளப்பும் வெனிசூயலா முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் அலிசியா!

By Shankar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்(யு.எஸ்): வெனிசூயலா நாட்டைச் சார்ந்த மிஸ் யுனிவர்ஸ் அலிசியா மச்சாடோ, அமெரிக்க அரசியலில் புதிய பரபரப்பைக் கிளப்பி வருகிறார்.

அலிசியா மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றபோது, டைட்டில் ஸ்பான்சர் இதே ட்ரம்ப்தான். இவர்தான் தனது நிறுவனங்களின் மாடலாக அலிசியாவை ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால் அலிசியா சற்று சதை போட்டதும், ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகக் கூறி அலிசியாவிடம் கடுமையாக நடந்து கொண்டாராம் ட்ரம்ப்.

Alicia Machado vs. Donald Trump

அலிசியாவை மிஸ்.பன்றி (Ms.Piggy), மிஸ். வீட்டு வேலைக்காரி (Miss. Housekeeping) என கேவலமாகப் பேசினாராம். இதைத்தான் அதிபர் வேட்பாளர் விவாதத்தின் போது ஹிலரி குற்றம்சாட்டிப் பேசினார்.

தற்போது அமெரிக்க குடியுரிமை பெற்ற அலிசியா இந்த அரங்கில் இருக்கிறார். அவர் இந்த தேர்தலில் வாக்களிக்கப் போகிறார் என்றும் கேட்டார்.

அன்று முதல் அலிசியா பற்றி விவாதங்கள் அமெரிக்க அரசியலில் முக்கிய இடம் பிடித்து வருகின்றன.

கடந்த வாரம் முழுவதும் ட்ரம்ப், அலிசியாவை விமர்சிப்பதிலேயே கவனம் செலுத்தினார்.

Alicia Machado vs. Donald Trump

அலிசியாவின் பின்னணி தெரியாமல் ஹிலரி அவரை முன்னிலைப் படுத்துகிறார். அவர் பலான படங்களில் நடித்தவர், கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர். அப்படிப்பட்டவரை பெண்ணினத்தின் பிரதிநிதியாக ஹிலரி முன்னிறுத்துகிறார் என்றெல்லாம் கூறி தனது செயலை நியாயப்படுத்தப் பார்த்தார்.

இந் நிலையில் அலிசியா சிஎன்என் க்கு அளித்த பேட்டியில் நான் ஒன்றும் புனிதமானவள் இல்லை. ஆனால் ட்ரம்ப் என்னை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி கொடுமைப்படுத்தினார். மிகக் கடுமையாக நடந்து கொண்டார் என்று கூறியுள்ளார்.

அலிசியா மீது வெனிசூயலாவில் ஒரு கொலைக்கு உடந்தையாக இருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த சமயத்தில் தான் ஒரு படப்பிடிப்பில் இருந்ததாக அலிசியா கூறியுள்ளார்.

Alicia Machado vs. Donald Trump

மேலும் அவருடன் ஸ்பானிஷ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உடன் நடித்த நடிகர், படப்பிடிப்பில் அலிசியாவுடன் பாலியல் உறவு கொண்டாதாக தெரிவித்துள்ளார். தற்போது அலிசியா வைப் பற்றி இணையத்தில் தேடுதல்கள் அதிகரித்துள்ளன. தேர்தல் களத்தை திசை திருப்பும் வகையிலும் இது அமைந்துள்ளது.

அழகிகளுக்கும் அமெரிக்க அரசியலுக்கும் நீண்ட நாள் தொடர்புதான் போலிருக்கு. கென்னடி, க்ளிண்டன் என அதிபர்களே அழகிகளின் பிடியில் சிக்கியவர்கள் தானே!

English summary
Alicia Machado, the former Venezuelan beauty queen whose treatment by Donald Trump nearly 20 years ago became a potent political weapon for the Clinton campaign, has had numerous brushes with controversy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X