For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாறப் போகிறதா வரலாறு... சீனாவில் 174 மில்லியன் ஆண்டு பழமையான டைனோசர் படிவம் கண்டுபிடிப்பு

சீனாவில் 174 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசர் படிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சீனாவில் 174 மில்லியன் ஆண்டு பழமையான டைனோசர் படிவம் கண்டுபிடிப்பு

    வாஷிங்டன்: வடமேற்கு சீனாவின் மலைப் பகுதியில் புதைபடிவ அறிவியலாளர்கள் 160 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தாவர உண்ணி டைனோசரின் புதைபடிவத்தை கண்டுபிடித்துள்ளனர்.

    வடமேற்கு சீனாவின் மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதைபடிவம் ஒன்று அறிவியலாளர்களை டைனோசரின் கால வரலாற்றை மாற்றி எழுத நிர்பந்தித்துள்ளது. இதுதான் பூமியில் வாழ்ந்த மிகப்பெரிய விலங்கு என்று அறியப்பட்டுள்ளது.

     Amazing Dragon Fossils discovered

    புதைபடிவ அறிவியலாளர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை லிங்வுலங் ஷென்கி கண்டுபிடிப்புகளைப் பற்றி அறிவித்துள்ளனர். லிங்வுலங் டைனோசர் நீண்ட கழுத்தையும், நிளமான வாலையும், சிறிய தலையும், தூண் போன்ற கால்களையும் கொண்ட சாரோபாட் என அழைக்கப்பட்ட தாவரங்களை உன்னும் டைனோசர் குழுவின் தொடக்க கால உயிரினம். இந்த லின்வுலங் ஜுராசிக் காலத்திலிருந்து 174 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தது.

    இந்த பெயருக்கான பொருள் லிங்வுலிருந்து அதிசய டிராகன் என்பதாகும். இந்த புதை படிவம் கண்டுபிடிக்கப்பட்ட இடம் நகரத்துக்கு மிக அருகில் உள்ளது. இந்த இடத்தை ஆடு மேய்க்கும்போது பார்த்த ஒரு விவசாயிதான் காட்டியுள்ளார்.

    அந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்த அறிவியலாளர்கள் 8 லிருந்து 10 வரை எலும்புகளை கண்டுபிடித்துள்ளனர். அது 57 அடி நீளம் கொண்டது. அதாவது 17.5 மீட்டர் நீளம். இதுதான் மிகப்பெரிய டைனோசர் என்று சீன அறிவியல் கழகத்தின் புதைபடிவ அறிவியலாளர் சிங் சு தெரிவித்துள்ளார். மேலும், இது இயற்கை தகவல்தொடர்பு என்ற ஆய்விதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    இந்த ஆய்வு சாரோபாட் என்ற தாவர உண்ணி டைனோசர்களின் வரலாற்றுக் காலத்தை 15 மில்லியன் ஆண்டுகளுக்கு அப்பால் தள்ளியுள்ளது. இந்த ஆய்வின் காலம் குறித்து ஆய்வாளர்களிடையே இருவேறு கருத்துகளும் நிலவுகிறது. இருப்பினும் இதுதான் பழமையான மிகப்பெரிய டைனோசர் படிவம் என்பது உறுதியாகியுள்ளது.

    English summary
    Dinosaurs fossils unearthed on a hillside in northwestern China are forcing scientists to rethink the history of a dinosaur lineage. It is the largest animals ever in the planet. It was lived 17 million years ago.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X