‛‛மறுபிறவி’’.. இஸ்ரேலுக்காக போரிட்டு உயிர் தியாகத்துக்கு துணிந்த மணிப்பூர் ராணுவ வீரர் -பரபர பின்னணி
இஸ்ரேல்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நடந்து வருகிறது. இதற்கிடையே தான் ஹமாஸ் படைக்கு ஆதரவாக லெபனான் நாட்டில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் இந்திய வம்சாவளி மணிப்பூரை சேர்ந்த ராணுவ வீரர் காயமடைந்துள்ளார். தற்போது சிகிச்சையில் உள்ள அவர் எப்படி இஸ்ரேல் சென்று, அங்குள்ள ராணுவத்துக்காக களமிறங்கினார் என்பது பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
பாலஸ்தீனத்தில் காசா பகுதி உள்ளது. இங்கு மொத்தம் 23 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். ஒரு காலத்தில் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த காசா பகுதி அதன் பிறகு பாலஸ்தீனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது காசாவில் ஹமாஸ் எனும் அமைப்பு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பு காசாவில் இஸ்ரேலை அனுமதிப்பது இல்லை. இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் மோதல் காலம் காலமாக நடந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை தீவிரவாதிகள் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதற்கிடையே தான் திடீரென ஹமாஸ் தீவிரவாதிகள் 7 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி கடந்த 7 ம் தேதி தாக்குதல் நடத்தினர்.
இதுவரை 7 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். மேலும் 14 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். காசாவில் ஹமாஸ் அமைப்பினர் இருக்கும் பகுதியை குறிவைத்து இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் தற்போது காசாவை முழுமையாக முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல் ராணுவம் விரைவில் அங்கு தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்த உள்ளது.
இதற்கிடையே தான் ஹமாசுக்கு எதிரான போரில் இந்தியா வம்சாவளியை சேர்ந்த ஏராளமானவர்கள் இஸ்ரேலுக்காக ஆயுதம் ஏந்தி ராணுவம் மூலம் போராடி வருகின்றனர். இந்நிலையில் தான் இஸ்ரேலுக்காக போரிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த ராணுவ வீரர் காயமடைந்துள்ளார். அவரது பெயர் நடனெல் டூதாங். மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூர் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த இவருக்கு தற்போது 26 வயது ஆகிறது. இவர் கடந்த 2018 ம் ஆண்டு தனது தாயுடன் இஸ்ரேலுக்கும் இடம் பெயர்ந்தார். பீட் ஷீன் எனும் பகுதியில் அவர் வசித்து வருகிறார். சமீபத்தில் அவர் திருமணம் செய்து கொண்டார்.
அதோடு நடனெல் டூதாங் இஸ்ரேலில் ராணுவ சேவையாற்றி வருகிறார். இஸ்ரேல்-லெபனான் எல்லையில் அவர் பணியாற்றி வருகிறார். காசா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு எதிராக லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 18 ம் தேதி நடத்தப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் தான் நடனெல் டூதாங் காயமடைந்துள்ளார்.
அவரது கண், கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் ஹைஃபாவில் உள்ள ரம்பம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் நலமாக உள்ளார். இஸ்ரேலை பொறுத்தமட்டில் யூதர்கள் அதிகமாக உள்ளனர். இந்தியாவிலும் மணிப்பூர், மிசோரம் உள்பட பிற வடகிழக்கு மாநிலங்களில் யூதர்கள் அதிகம் உள்ளனர். மேலும் ஏராளாமனவர் இஸ்ரேலுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். தற்போது காயமடைந்த நடனெல் டூதாங்கும் அப்படித்தான் இஸ்ரேலுக்கு சென்றவர் தான்.
மணிப்பூர் மற்றும் மிசோராமை சேர்ந்த 400க்கும் அதிகமான யூதர்கள் இஸ்ரேல் ராணுவத்தில் சேர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் டெகல் மெனாஷே என்ற அமைப்பின் கீழ் செயல்பட்டு வருகின்றனர். இந்த டெகல் மெனாஷே என்பது மணிப்பூர் மற்றும் மிசோராமை சேர்ந்த பினே மெனாஷே யூதர் குடியேற்றம் மற்றும் ஒருங்கிணைப்பு செய்யும் பணியை இஸ்ரேலில் செய்து வருகிறது. இந்த அமைப்பின் நிர்வாக இயக்குனர் யிட்சாக் (ஐசக்) கூறுகையில், ‛‛நடனெல் டூதாங் வடக்கு இஸ்ரேலில் பாதுகாப்பு பணயில் ஈடுபட்டு இருந்தார். அப்போது ஏவுகணை தாக்குதலில் காயமடைந்தார். அவர் மருத்துவ சிகிச்சையில் உள்ளார். தற்போது அவர் நலமாக இருக்கிறார்'' என்றார்.












Click it and Unblock the Notifications