இந்தியா-மாலத்தீவு சப்போர்ட் யாருக்கு? பாகிஸ்தான் மாஜி வீரர் தனேஷ் கனேரியா கூறிய ஒரு வார்த்தை.. வாவ்
இஸ்லாமாபாத்: இந்தியா-மாலத்தீவு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் நடிகர், நடிகைகள், இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவுக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் மாஜி சுழற்பந்து வீச்சாளர் மாலத்தீவை புறக்கணிக்கும் வகையில் ஒற்றை வார்த்தையில் இந்தியாவுக்கு ஆதரவாக கூறியுள்ள கருத்து அனைவரையும் ஈர்த்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடாக மாலத்தீவு உள்ளது. மாலத்தீவு என்பது சுற்றுலாவுக்கு மிகவும் பெயர் பெற்றது. ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து ஏராளமானவர்கள் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தான் தற்போது இந்தியாவுக்கும்-மாலத்தீவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமானவர்கள் பொங்கல் விடுமுறைக்காக மாலத்தீவுக்கு செல்ல திட்டமிட்ட சுற்றுலாவை கேன்சல் செய்து வருகின்றனர். மேலும் இந்தியர்கள் அனைவரும் இந்தியாவின் தீவுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தியா-மாலத்தீவு இடையேயான பிரச்சனைக்கு காரணம் யார் என்றால் மாலத்தீவின் பிபிஎம் கட்சியின் கவுன்சில் உறுப்பினர் ஜாஹித் ரமீஸ் தான். அதாவது பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 3ம் தேதி இந்தியாவின் லட்சத்தீவுக்கு சென்றார். அங்குள்ள பிரிஸ்டீன் பீச்சில் அவர் நடைப்பயிற்சி செய்த வீடியோ போட்டோக்களை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். லட்சத்தீவின் அழகை வெளியுலகிற்கு காட்டும் வகையில் அவர் செய்திருப்பதாக கூறி பலரும் வரவேற்றனர்.
இதுதொடர்பான பதிவுக்கு ஜாஹித் ரமீஸ் இந்தியர்களை கேலி செய்தும், இனவெறியை காட்டும் வகையிலும் பதிவிட்டு இருந்தார். இந்தியா எங்கள் மாலத்தீவுடன் போட்டியிட முடியாது. இந்தியர்களின் அறைகளில் இருந்து கெட்ட நறுமணம் வரும் என தரக்குறைவாக விமர்சனம் செய்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் மாலத்தீவு அமைச்சர்களான அப்துல்லா மஹ்சூம் மஜித், மரியம் ஷியுனா, மால்ஷா ஷெரீப் ஆகியோர் பிரதமர் மோடி குறித்து தரக்குறைவான விமர்சனங்களை செய்தனர்.
இது இந்தியர்களை கடும் கோபத்தில் தள்ளியது. இதையடுத்து மாலத்தீவு சுற்றுலாவை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும். மாறாக இந்தியாவில் உள்ள தீவுகளுக்கு மக்கள் சுற்றுலா செல்ல வேண்டும். லட்சத்தீவை மக்கள் முதன்மை விருப்பமாக தேர்வு செய்து சுற்றுலா செல்ல வேண்டும் என தெரிவித்தனர். இதனை வலியுறுத்தி பாலிவுட் நடிகர்கள் அக்சய் குமார், சல்மான் கான், இந்திய மாஜி கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், தற்போதைய வீரர் ஹர்த்திக் பாண்ட்யா உள்பட ஏராளமானர்கள் தங்களின் எக்ஸ் பக்கத்தில் கருத்துகள் தெரிவித்தனர்.
Lakshadweep 🔥
— Danish Kaneria (@DanishKaneria61) January 8, 2024
இதனால் மாலத்தீவுக்கு செல்ல திட்டமிட்ட இந்தியர்கள் தங்களின் சுற்றுலா திட்டத்தை கேன்சல் செய்தனர். மாலத்தீவை பொறுத்தமட்டில் சுற்றுலா துறை தான் பிரதான வருமானமாக உள்ளது. இதனால் மாலத்தீவு அரசு பயந்துபோனது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்த 3 அமைச்சர்களையும் அதிரடியாக நீக்கம் செய்தது. இருப்பினும் இந்தியர்கள் தொடர்ந்து மாலத்தீவுக்கு எதிராக பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் இந்தியா-மாலத்தீவு இடையேயான பிரச்சனைக்கு நடுவே பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான தனீஷ் கனேரியா தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் இந்தியாவுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் ‛‛Lakshadweep'' என டைப் செய்து ஆதரவை தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications