For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இனி யாரும் தப்ப முடியாது.. ஊழல் செய்பவர்களை கண்டுபிடிக்க ரோபோட்.. அசத்திய ஸ்பெயின்!

ஊழல் செய்பவர்களை கண்டுபிடிக்க ஸ்பெயினில் ரோபோட் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

மேட்ரிட்: சமீப காலமாக உலகில் எல்லா விஷயங்களை செய்யவும் ரோபோட் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. தொடக்க காலத்தில் மனிதர்களால் செய்ய முடியாத பணிகளை செய்ய மட்டுமே ரோபோட் உருவாக்கப்பட்டது.

தற்போதெல்லாம் மனிதர்கள் செய்யக்கூடிய செயலை வேகமாகவும், விரைவாகவும் செய்ய ரோபோட் உருவாக்கப்பட்டு வருகிறது. இது மனித இனத்தில் பெரிய மாற்றத்தை உருவாக்கி வருகிறது.

அந்த வகையில் ஸ்பெயினில் ஊழலை கண்டுபிடிக்கும் ரோபோட் ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. இது செயல்படும் விதமே மலைக்க வைக்கும் அளவிற்கு இருக்கிறது.

செயல்பாடு

செயல்பாடு

ஸ்பெயினில் இருக்கும் 'வல்லாடோலித் பல்கலைக்கழகம்' இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தி இருக்கிறது. அதன்படி இந்த ரோபோட்டிடம் நாம் சந்தேகிக்கும் வியாபாரம் குறித்தோ, திட்டம் குறித்தோ தகவல் கொடுத்தால் அது ஊழல் நடந்து இருக்கிறதா என்று கூறும். ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் தொழில்நுட்பம் மூலம் இந்த ரோபோ இயங்குகிறது.

எப்படி

எப்படி

இந்த ரோபோட்டிடம் இதுவரை நடந்த பல்வேறு ஊழல்கள் குறித்த தகவல்கள் அடங்கி இருக்கும். அதையும் நாம் கொடுக்கும் தகவலையும் அது சரிபார்க்கும். அதேபோல் அந்த தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, அந்த கட்சியின் செயல்பாடு, அவர் பேசியது, அந்த ஊழல் குறித்து அவர் கூறியது என அனைத்தையும் அந்த ரோபோட் சரிபார்க்கும் இதன் மூலம் ஊழலை கண்டுபிடிக்கும்.

18 வருடம்

18 வருடம்

இதற்காக கடந்த 2000ல் இருந்து ஸ்பெயினில் நடந்த ஊழல் குறித்த தகவல்கள் அந்த ரோபோவின் மெமரியில் ஏற்றப்பட்டு இருக்கிறது. ஐரோப்பாவில் நடந்த பெரிய குற்றங்கள் குறித்த தகவலும் அதில் ஏற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த ரோபோட் எளிதாக சோதனை செய்ய முடியும்.

முடிவு

முடிவு

இந்த ரோபோட் தவறு எவ்வளவு நடந்து இருக்க வாய்ப்பு இருக்கும் என்று சதவிகிதம் கொடுக்கும். 70 சதவிகிதத்திற்கு அதிகமாக இருந்தால் கண்டிப்பாக ஊழல் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பிற நாடுகளில் நடந்த ஊழல் குறித்த தகவல்கள் இதில் கொடுக்கப்பட்டு ஏற்கனவே சரியாக வேலை செய்கிறதா என்று சோதனை செய்யப்பட்டுவிட்டது.

English summary
An AI Robot in Spain can find scam in the country. University of Valladolid in Spain created this robot. It has huge number details about scams, from the detail it can find new scams easily.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X