நள்ளிரவில் அதிர்ந்த பூமி.. நிலநடுக்கத்தால் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்த மக்கள்.. தஜிகிஸ்தானில் ஷாக்
துஷான்பி: தஜிகிஸ்தான் நாட்டில் நள்ளிரவு 1 மணியளவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் வீடுகள் குலுங்கியதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்து நடுரோட்டில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 என்ற அளவில் பதிவாகி உள்ளது.
மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றாக தஜிகிஸ்தான் உள்ளது. இந்த நாடு தெற்கே ஆப்கானிஸ்தான், மேற்கே உஸ்பெகிஸ்தான், வடக்கே கிர்கிஸ்தான், கிழக்கே சீனா உள்ளிட்ட நாடுகளை கொண்டுள்ளது.

சென்னையை விட இங்கு குறைந்த அளவில் தான் மக்கள் தொகை உள்ளனர். அதாவது தஜிகிஸ்தானில் மொத்தம் 1 கோடியே 7 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் தஜிகிஸ்தான் நாட்டில் நள்ளிரவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகள் லேசாக குலுங்கி உள்ளது. வீட்டில் இருந்த பொருட்கள் தவறி கீழே விழுந்துள்ளது. இதனால் பயந்துபோன பொதுமக்களின் தங்களின் குழந்தைகளை தூக்கி கொண்டு வெளியே ஓடிவந்து பொதுவெளியில் தஞ்சமடைந்தனர். அங்கு ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை.
Earthquake of magnitude 4.0 jolts Tajikistan
— ANI Digital (@ani_digital) July 19, 2025
Read @ANI Story | https://t.co/WnOoZCNJ7K#Tajikistan #earthquake #NCS pic.twitter.com/iJ7pgy1PDl
இந்த நிலநடுக்கத்தை நம் நாட்டின் தேசிய நிலஅதிர்வு மையம் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அதன் எக்ஸ் பக்கத்தில், ‛‛தஜிகிஸ்தானில் நள்ளிரவு 1 .01 மணிக்கு நிலநடுக்கம் ஏ்பட்டள்ளது. பூமிக்கடியில் 160 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் நிலை கொண்டிருந்தது. ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 4 என்று பதிவாகி உள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications