அண்டார்டிகாவில் உடைந்த பனிப்பாறை.. சென்னையைவிட 3 மடங்கு பெரிசாம்! இந்தியாவுக்கு ஆபத்து? ஷாக் தகவல்
குயின் மவுட் லேண்ட்: சென்னையை விட மூன்று மடங்கு பெரிய பனிப்பாறை ஒன்று அண்டார்டிகாவில் உடைந்து கடலில் பயணிக்க தொடங்கியுள்ளது. இது உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஒட்டு மொத்த மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பது காலநிலை மாற்றம்தான். இதனால் அண்டார்டிகா மற்றும் ஆர்டிக் பகுதியிலிருந்து பனி கட்டிகள் அதிக அளவு உருகுகின்றன. இப்படியே போனால் கடல் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரிக்கும். அதாவது சென்னை போன்ற கடலோர நகரங்கள் முற்றிலுமாக மூழ்கிவிடும். மட்டுமல்லாது வானிலையில் எதிர்பாராத மாற்றங்கள் உருவாகும். ஒரு பக்கம் அதிக வறட்சியும், மறு பக்கம் அதிக மழை வெள்ளமும் ஏற்படும்.

எனவே பூமி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த வேண்டும் என விஞ்ஞானிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இப்படி இருக்கையில் மற்றொரு எச்சரிக்கையை அவர்கள் விடுத்திருக்கிறார்கள். அதாவது சென்னையை விட சைஸில் மூன்று மடங்கு பெரியதாக இருக்கும் பெரிய பனி கட்டி ஒன்று அண்டார்டிகாவிலிருந்து உடைந்து கடலில் பயணிக்க தொடங்கியுள்ளது.
A23a என பெயரிடப்பட்டுள்ள இந்த பனி பாறையில் ஒரு காலத்தில் சோவியத் ரஷ்யா ஆய்வகத்தை அமைத்து ஆய்வில் ஈடுபட்டிருந்தது. கடந்த 37 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த பாறை உடைய தொடங்கிவிட்டது. சுமார் 4 ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவை கொண்ட இந்த பனிக்கட்டி தற்போது அண்டார்டிக்காவை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற தொடங்கியுள்ளது.
இது குறித்து பிரிட்டிஷ் ஆய்வாளர் ஆலிவர் மார்ஷ் கூறுகையில், "இந்த பனி பாறை எப்படி உருகியது என்பது தெரியவில்லை. ஆனால் உலக வெப்பமயமாதல் என்பதுதான் பிரதான காரணமாக இருக்கக்கூடும். இது போன்று ஏற்கெனவே பனி பாறைகள் உருகி இருக்கின்றன. அதை எல்லாவற்றையும் விட இது பெரியது. இப்படி உருகும் பாறைகள் கடல் நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டு ஏதாவது நாடுகளுடன் மோதினால் அங்கு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
கடந்த 2020ம் ஆண்டு இதேபோல A68 எனும் பனிப்பாறை உருகி கடலில் பயணித்தது. ஒரு கட்டத்தில் தெற்கு ஜார்ஜியா தீவின் மீது மோத இருந்தது. ஆனால் அதற்குள் இது பல துண்டுகளாக உடைந்துவிட்டதால் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. A68 பனிப்பாறை அளவில் சிறியது, அதனால் பிரச்னை இல்லை. A23a பனிப்பாறை அப்படி இல்லை. இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
உலக அளவில் பசுமை இல்ல வாயு வெளியேற்றம் கடந்த 2021ம் ஆண்டை விட இப்போது 1.2 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இப்படியே போனால், பாரிஸ் உடன்படிக்கையில் எடுக்கப்பட்டுள்ள உறுதிமொழிகளை அமல்படுத்தினாலும் கூட நமது பூமியின் வெப்பம் 2100ம் ஆண்டில் 2.5லிருந்து 2.9 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனால் ஏற்படும் வெப்பம் இப்போது உருகிய A23a பனி பாறைகளை விட அதிக அளவு கொண்ட பனி பாறைகளை உருக்கும். இவை இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில்தான் அதிக பதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications