For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

15 வயதைக் குறைத்துக் காட்டி, பேஸ்புக்கில் சேர்ந்த 113 வயது அமெரிக்கப் பாட்டி

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: தனது உண்மையான வயதிலிருந்து 15ஐக் குறைத்து, பொய்யான வயதுடன் பேஸ்புக்கில் சேர்ந்துள்ளார் 113 வயது அமெரிக்கப் பாட்டி ஒருவர்.

இது பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களின் காலம் எனலாம். அந்தளவிற்கு தங்களது எண்ணங்களை, கருத்துக்களைச் சுதந்திரத்துடன் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவும் சமூக வலைதளங்களில் மக்கள் அதிக ஆர்வத்துடன் இயங்கி வருகின்றனர். நாட்டில் நடைபெறும் முக்கியச் சம்பவங்கள் குறித்து விமர்சிப்பதிலிருந்து, பேரழிவுக் காலங்களில் உதவிக்கரம் நீட்டுவது வரை என சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள அன்னா ஸ்டோஹெர் என்ற 113 வயது பாட்டிக்கும் பேஸ்புக்கில் சேர வேண்டும் என்ற ஆசை உண்டானது.

ஆர்வம்...

ஆர்வம்...

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மினியோஸ்டாவைச் சேர்ந்தவர் அன்னா ஸ்டோஹெர். தனது வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தினமும் பேஸ்புக்கிலேயே மூழ்கிக் கிடப்பதும், அதைப் பற்றி பேசுவதும் அன்னாவிற்கு பேஸ்புக் மீதான ஆர்வத்தை அதிகரித்தது.

பேஸ்புக்கில் சேர முடிவு...

பேஸ்புக்கில் சேர முடிவு...

எனவே, தானும் பேஸ்புக்கில் சேர்வது என அன்னா முடிவு செய்தார். ஆனால், 1905ம் ஆண்டிற்கு பின்னர் பிறந்தவர்களால் மட்டுமே பேஸ்புக்கில் சேர முடியும் என்பது நிபந்தனை. எனவே, தனது வயதை மாற்றி பதிவு செய்து கணக்கைத் தொடங்கினார் அன்னா.

15 வயதைக் குறைத்தார்...

15 வயதைக் குறைத்தார்...

1900-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிறந்த அன்னா, வரும் 15-ஆம் தேதி தனது 114-வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். ஆனால், பேஸ்புக் கணக்குப் படி தனது வயதை 15 வருடங்கள் குறைத்துப் பதிவு செய்தார்.

உற்சாகம்....

உற்சாகம்....

114-வது வயதை நெருங்கும் வேளையில், ஃபேஸ்புக்கில் இணைந்தது தனக்கு உற்சாகம் ஏற்படுத்துவதாக அவர் கூறும் அன்னா, தனக்கு கூகுள், இ-மெயில் போன்ற விஷயங்கள் குறித்து முதன்முதலில் அறிமுகம் செய்து வைத்த வெரிசான் நிறுனத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

புதிய உலகம்...

புதிய உலகம்...

மேலும், தனது வாழ்நாளில் பல இலக்கியங்களை படித்து அதன் மீது ஆர்வம் குறைந்ததாகவும், தற்போது ஐ-பேட் தனக்கு புது உலகத்தை காட்டி உள்ளதாகவும், ஃபேஸ்புக் புதியவர்களுடன் இணையும் தளமாக இயங்குவதாகவும் உற்சாகமாக கூறுகிறார் அன்னா..

வயதான இளைய தலைமுறை...

வயதான இளைய தலைமுறை...

தனது 15 வயதைக் குறைத்துப் பேஸ்புக்கில் இணைந்துள்ள அன்னாவை, சமூக வலைதளங்களில் வயதான இளையதலைமுறை (oldest teenager) என மற்றவர்கள் குறிப்பிடுகின்றனர்.

English summary
It has been reported that Anna Stoehr lied about her actual age in order to have an account on Facebook.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X