110 பேர் பலி.. மற்றொரு நிலநடுக்கத்தால் அலறும் சீனா.. ஏராளமான கட்டடங்கள் சேதம்.. மீட்பு பணி தீவிரம்

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீனாவில் 6.2 என்ற ரிக்டர் அளவில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100க்கும் அதிகமானவர்கள் பலியான நிலையில் அடுத்ததாக 5.5 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் சீனாவில் வசிக்கும் மக்கள் பதற்றமடைந்துள்ளனர்.

நம் அண்டை நாடான சீனாவின் வடமேற்கு பகுதிகள் என்பது மலை பிரதேசமாக உள்ளது. இங்கு தான் கன்சு மற்றும் கிங்காய் உள்ளிட்ட மாகாணங்கள் உள்ளன. இந்நிலையில் தான் நேற்று இரவு 11.59 மணிக்கு திடீரென்று அங்குள்ள கட்டடங்கள் குலுங்கி உள்ளன.

Another earthquake 5.5 richeter jolts in Xinjiang region after Gansu and Qinghai provinces in China

இதையடுத்து இரவில் வீடு, அடுக்குமாடி குடியிருப்புகளில் தூங்கியவர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். அப்போது சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அப்போது தான் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டதும், 100க்கும் அதிகமானவர்கள் கட்டடங்களில் சிக்கி உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மீட்பு பணிகள் தொடங்கின. கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து மீட்பு பணி என்பது நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே தான் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதாவது கிங்காய் மகாணத்தின் எல்லை பகுதியான ஹைதாங் எனும் இடத்தில் பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டு தாக்கி உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமாக பதிவாகி உள்ளது. இதில் கன்சு மாகாணம் அதிகமாக பாதிக்கப்பட்ட நிலையில் கிங்காய் மாகாணமும் பாதிப்பை சந்தித்துள்ளது.

மேலும் இன்று காலை 7.50 மணி நிலவரப்படி கன்சு மகாணத்தில் மட்டும் 105 பேர் பலியாகி இருப்பதும், 370 பேர் படுகாயமடைந்து இருப்பதும் தெரியவந்தது. மேலும் 4,700 வீடுகள் இடிந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மாறாக கிங்காய் மகாணத்தில் 11 பேர் வரை இறந்தது தெரியவந்தது. இதன்மூலம் நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை என்பது 116 என உயர்ந்தது.

இந்த 2 மாகாணங்களில் மீட்பு பணி என்பது தொடர்ந்து நடந்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் சின்ஜியாங் பகுதியில் இன்னொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் வடமேற்கு பகுதியான சின்ஜியாங் பகுதியில் இந்த நிலநடுக்கம் 5.5 என்ற ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது. அங்கு ஏற்பட்ட சேதபாதிப்புகள் குறித்த விபரம் எதுவும் உடனடியாக தெரியவில்லை. இப்படி தொடர்ச்சியான நிலநடுக்கத்தால் சீனா மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+