இந்தியாவுடன் இன்னொரு போர் மட்டும் வந்தால் நடப்பதே வேற.. பாகிஸ்தானின் பிலாவல் பூட்டோ சவடால் பேச்சு
இஸ்லாமாபாத்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் கதி கலங்கிய பாகிஸ்தான், தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் அடாவடியாக பேசி வருகிறது. பாகிஸ்தான் ராணுவ தளபதி, அமெரிக்கா மண்ணில் இருந்தபடி அணு ஆயுத அச்சுறுத்தல் விடுத்து பேசியதோடு, சிந்து நதியில் அணை கட்டினால் அதை ஏவுகணைகளை கொண்டு தகர்ப்போம் என்று அடாவடியாக பேசியிருந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோவும் (Pakistan Bilawal Bhutto) அதே தொனியில் பேசியிருக்கிறார். இன்னொரு போர் வந்தால் ஆறு நதிகளையும் மீட்போம் என்று கூறியிருக்கிறார் பிலாவல் பூட்டோ.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. இதனால், மிரண்டு போயுள்ள பாகிஸ்தான் கண்டபடி பேசி வருகிறது. அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிர், இந்தியா சிந்து நதி நீரை தடுத்துள்ளது.

அணை கட்டிய பிறகு உடைப்போம்
சிந்து நதி, இந்தியாவின் குடும்ப சொத்து அல்ல. என்ன விலை கொடுத்தேனும் தண்ணீர் உரிமையை பாகிஸ்தான் பாதுகாக்கும். தண்ணீரை தடுக்கும் இந்தியாவின் சதியை முறியடிக்க எங்களிடம் ஆயுதங்களுக்கு பஞ்சம் இல்லை. பாகிஸ்தானுக்கு தண்ணீர் வராமல் தடுக்கும் எந்த அணையையும் உடைப்போம். இந்தியா அணை கட்டும் வரை காத்திருப்போம். அணை கட்டிய பிறகு அதை உடைப்போம்" என்று அடாவடியாக பேசினார்.
பாகிஸ்தான் ராணுவ தளபதி கருத்துகள் பொறுப்பற்றவை. தவறானவர்கள் கையில் சிக்குவதுதான் அணுஆயுதத்தால் ஏற்படும் உண்மையான ஆபத்து. பாகிஸ்தான் ராணுவ தளபதியின் கருத்துகள், அங்கு ஜனநாயகம் இல்லை என்பதை உணர்த்துகிறது என்று பாகிஸ்தான் ராணுவ தளபதியின் பேச்சுக்கு இந்தியா பதிலடி கொடுத்து இருந்தது.
இன்னொரு போர் வந்தால்
பாகிஸ்தான் ராணுவ தளபதியின் இந்த அடாவடி பேச்சு அடங்காத நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ, மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். பிலாவல் பூட்டோ கூறியதாவது:- சிந்து நதி மீது தாக்குதலை இந்திய பிரதமர் மோடி அறிவித்தால் அது நமது கலாசாரம், வரலாறு மீதான தாக்குதல் ஆகும்.
ராணுவ மோதலில் ஏற்பட்ட பின்னடைவால் இப்படி தண்ணீர் விவகாரத்தில் இந்தியா அத்துமீறுகிறது. சிந்து நதிக்கு அச்சுறுத்தல் வரும் போது எல்லாம் சிந்து மக்கள் அதை காக்க முன்வந்து இருக்கிறார்கள். "போர் ஏற்பட்டால் மோடியை எதிர்கொள்ளும் வலிமை பாகிஸ்தான் மக்களுக்கு உள்ளது" இன்னொரு போர் வெடித்தால் பாகிஸ்தான் தனது ஆறு நதிகளையும் மீட்க வேண்டியிருக்கும்" என்று அடாவடியாக பேசினார்.
சிந்து நதி ஒப்பந்தம்:
சிந்து நதி நீர் ஒப்பந்தம் கடந்த 1960 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் தேதி பாகிஸ்தானின் கராச்சி நகரில் கையெழுத்தானது. இந்த உடன்படிக்கையில் அப்போதைய இந்திய பிரதமர் நேரு, பாகிஸ்தான் பிரதமர் முகமது அயூப்கான், உலக வங்கி சார்பில் இலிப் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியா மற்றும் இந்தியா வழியாக பாகிஸ்தானுக்கு செல்லும் 6 ஆறுகளை பயன்படுத்துவது தொடர்பாக தீர்வு காணப்பட்டது.
மேற்கு ஆறுகளான சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகிய 3 ஆறுகளின் உரிமை பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. இந்த ஆறுகளின் நீரை இந்தியா மின் உற்பத்தி போன்ற திட்டங்கள் மற்றும் குடிநீருக்காக மட்டுமே பயன்படுத்தி கொள்ளலாம். கிழக்கு ஆறுகளான ரவி, பியாஸ், சட்லஜ் ஆகிய 3 ஆறுகளின் நீர் முழுவதையும் இந்தியா பயன்படுத்தி கொள்ளலாம். இந்த நதிகளில் இருந்து எவ்வளவு நீரை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம் என்பதாகும்.












Click it and Unblock the Notifications