106 ஆண்டுகள் பழமையான பழ கேக் அண்டார்டிகாவில் கண்டெடுப்பு

Posted By: BBC Tamil
Subscribe to Oneindia Tamil

பனியால் மூடப்பட்ட அண்டார்டிகா, பூமியில் மிக மோசமான இயற்கை சூழல்களை கொண்ட ஒரு பகுதிகளில் ஒன்றாகும்.

அண்டார்க்டிக் ஹெரிடேஜ் ட்ரஸ்ட் என்ற அமைப்பு, அண்டார்டிகா பகுதியில் 106 ஆண்டுகள் பழமையான பழ கேக் ஒன்றினை கண்டெடுத்துள்ளனர்.

அண்டார்டிகாவின் கேப் அடேர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இந்த கேக், பரிட்டனை சேர்ந்த ஆய்வுப்பயணியான ராபர்ட் ஃபால்கோன் ஸ்காட்க்கு சொந்தமானது என நம்பப்படுகிறது.

அண்டார்டிகாவின் உள்ள மிகப்பழமையான கட்டிடத்தில் இருந்து இந்த கேக் கண்டெக்கப்பட்டது.

இந்தப் பழமையான குடிலை நார்வேவை சேர்ந்த ஆய்வுப்பயணியான கார்ஸ்டன் போர்ச்க்ரேவிங் மற்றும் அவரது குழுவினர் 1899-ம் ஆண்டு கட்டியுள்ளனர்.

பிறகு 1911-ஆ ம் ஆண்டு தனது டெர்ரா நோவா அய்வுப்பயணத்தின் போது ராபர்ட் ஃபால்கோன் ஸ்காட் இந்த குடிலில் தங்கியுள்ளார்.

இந்த கேக் வைப்பட்டிருந்த தகரப் பெட்டி துருப்பிடித்திருந்த போதிலும், கேக் சிறந்த நிலையிலும், உண்பதற்குரிய வாசத்துடனும் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பிரிட்டனை சேர்ந்த பிஸ்கட் நிறுவனமான ஹன்ட்லே & பால்மர்ஸ் இந்த கேக்கை தயாரித்துள்ளனர்.

அண்டார்டிகாவில் வாழும் போதும், வேலை செய்யும் போதும் அதிக கொழுப்புடைய அதிக சக்கரை கொண்ட உணவுகளை உண்ணத் தோன்றும். இதற்குப் பழ கேக் சரியான பொருத்தமாக இருக்கிறது. ஒரு கோப்பை நேநீருடன் பழக் கேப் சாப்பிடுவது அவ்வளவு சிறந்ததாக இருக்கும் என இந்த அமைப்பின் தொல்பொருள் ஆய்வாளர் லிசி மீக் நேஷனல் ஜியோகிராஃபிக் இதழில் கூறியுள்ளார்.

ஆராய்ச்சியாளர்கள், கடந்த மே 2016 முதல் இந்தக் குடிலில் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருவிகள், உடைகள், மோசமாக அழுகிப்போன மீன், இறைச்சி என இதுவரை 1,500 பொருட்களை பூமிக்கு அடியில் இருந்து கண்டெடுத்துள்ளனர்.

பழ கேக் உள்பட கண்டுபிடிக்கப்பட்டுள்ள எல்லாப் பொருட்களும், இருந்த இடத்திலே திரும்ப வைக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
Ice-covered Antarctica is one of the earth's most hostile natural environments.But a new find by the Antarctic Heritage Trust suggests it's no match for a 106-year-old British fruitcake.
Please Wait while comments are loading...