மனிதர்களை மிஞ்சும் AI? தனக்குத்தானே வாரிசை உருவாக்குதாம்.. மிக அருகே வந்துவிட்டது பேரழிவு!

Subscribe to Oneindia Tamil

சான் பிரான்சிஸ்கோ: 'டெர்மினேட்டர்' படத்தில் வரும் ஒரு ஏஐ சிஸ்டம், மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறி தனக்குத்தானே முடிவுகளை எடுத்து உலகையே ஆட்டிப்படைக்கும். அது வெறும் சினிமா என்று நாம் நினைத்துக் கொண்டிருந்த வேளையில், "உண்மையிலேயே ஏஐ சிஸ்டம்கள் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறித் தனக்குத்தானே மேம்படுத்திக் கொண்டு, புதிய வாரிசு ஏஐகளை உருவாக்கத் தொடங்கிவிடும்!" என்று க்ளாட் ஏஐ-ன் தாய் நிறுவனமான 'ஆந்த்ரோபிக்' எச்சரித்துள்ளது.

இந்த காலத்தில் நாம் திரும்பிய பக்கம் எல்லாம் ஏஐ தான் இருக்கிறது. நாம் கண்ணிமைக்கும் நேரத்தில் ஏஐ மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இருப்பினும், இந்த அசுர வளர்ச்சி என்பது மிகப் பெரிய ஆபத்திலும் கூட முடியலாம் என்று வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள். இதற்கிடையே ஆந்த்ரோபிக் நிறுவனமும் இது தொடர்பாக முக்கியமான எச்சரிக்கையைக் கொடுத்துள்ளது.

Anthropic AI

தன்னை தானே உருவாக்கும்

இது தொடர்பாக ஆந்த்ரோபிக், 'ரிகர்சிவ் செல்ஃப் இம்ப்ரூவ்மென்ட்' (Recursive self-improvement) எனப்படும் தொடர் தன்னை தானே மேம்படுத்திக் கொள்ளும் நிலையை ஏஐ எட்டப் போகிறது. அதாவது, மனிதர்களின் எந்தவொரு தலையீடும், உதவியும் இல்லாமல் ஒரு ஏஐ சிஸ்டம் தன்னைத்தானே அப்டேட் செய்து கொண்டு, தன்னை விட பல மடங்கு சக்தி வாய்ந்த அடுத்த தலைமுறை ஏஐ சிஸ்டத்தை முழுமையாக வடிவமைத்து உருவாக்கிவிடும்!

இந்த நிலை வரும்போது, ஏஐ சிஸ்டம்கள் மீதான கட்டுப்பாட்டை மனிதர்கள் முழுமையாக இழந்துவிடும் அபாயம் மிக அதிகம் என்று ஆந்த்ரோபிக் எச்சரித்துள்ளது. இது ஏதோ எதிர்காலத்தில் நடக்கப் போகும் கற்பனைக் கதை அல்ல.. இப்போதே அதற்கான அறிகுறிகள் தொடங்கிவிட்டன. நடப்பு 2026 மே மாத நிலவரப்படி, ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் சாஃப்ட்வேர் மாஸ்டர் பிளான் எனப்படும் கோட்பேஸில் உள்ள கோடிங்கில் 80 சதவீதத்திற்கும் அதிகமான கோடுகளைக் 'க்ளாட்' (Claude) ஏஐ-தான் எழுதுவதாக அந்த நிறுவனமே ஒப்புக்கொண்டுள்ளது!

எச்சரிக்கை

வழக்கமாக ஏஐ நிறுவனங்கள் தங்களின் வளர்ச்சியைப் பெருமையாகப் பேசும். ஆனால், ஆந்த்ரோபிக் நிறுவனம் இந்த அசுர வேக ஏஐ வளர்ச்சியால் வரப்போகும் தீமைகளைப் பற்றித் தொடர்ந்து எச்சரிக்கும் ஒரு வித்தியாசமான நிறுவனமாக இருக்கிறது. இது தொடர்பாக அவர்கள் மேலும், "ஏஐ தன்னைத்தானே உருவாக்குவது என்பது மனித வரலாற்றின் மிகப்பெரிய தொழில்நுட்ப மைல்கல். இது அறிவியல், மருத்துவம் போன்ற துறைகளுக்கு மிகப்பெரிய நன்மைகளைக் கொண்டு வரலாம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், தனக்குத்தானே வாரிசுகளை உருவாக்கும் இந்த ஏஐகளை நாம் எப்படிப் பாதுகாக்கப் போகிறோம், எப்படிக் கண்காணிக்கப் போகிறோம் என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி" என்று இந்நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

உண்மையான சவால்

இது குறித்து ஃபியூச்சர் ஷிப்ட் லேப்ஸ் இணை நிறுவனர் சாகர் விஷ்னோய் பேசுகையில், "ஏஐகளே தங்களின் அடுத்த வெர்ஷன்களுக்கான கோடுகளை எழுதத் தொடங்கும்போது, சவால் என்பது ஏஐயின் திறனை வளர்ப்பதில் இல்லை.. அதை எப்படிக் கட்டுப்படுத்தப் போகிறோம் என்பதில் தான் இருக்கிறது. இவை எப்போதும் மனிதர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது என்பதை உறுதி செய்வதில்தான் நமக்கு உண்மையான சோதனை இருக்கும்" என்று கூறியுள்ளார்.

இந்த ஆபத்தைத் தவிர்க்க, உலகிலுள்ள அனைத்து முன்னணி ஏஐ நிறுவனங்களும் ஒன்றிணைந்து, அதிநவீன ஏஐ மேம்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஆந்த்ரோபிக் கேட்டுக்கொள்கிறது. ஆனால், இதில் ஒரு சிக்கலும் இருக்கிறது. எச்சரிக்கையாக இருக்கும் நல்ல நிறுவனங்கள் ஏஐ வளர்ச்சியை நிறுத்தினால், எந்தக் கட்டுப்பாடும் இல்லாத மோசமான நிறுவனங்கள் தொழில்நுட்பத்தில் முன்னேறி, உலகையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிவிடும்.

சாத்தியமில்லை

ஏஐ வளர்ச்சியை நிறுத்தி வைப்பது என்பது கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், நடைமுறையில் சாத்தியமில்லை என்கிறார்கள் வல்லுநர்கள்! சந்தைப் போட்டியில் நாம் பின் தங்கிவிடுவோம் என்ற பயம் எல்லா நிறுவனங்களுக்கும் இருப்பதால், அனைவரையும் ஏஐ வளர்ச்சியை நிறுத்த மாட்டார்கள் என்பதே வல்லுநர்களின் வாதமாக இருக்கிறது.

இது கடினம் என்றாலும் இதுதான் சரியான தீர்வாக இருக்கும் என்கிறார் தி கட்டிங் எட்ஜ் குரூப் நிறுவனர் அன்ஷ் மெஹ்ரா. இது தொடர்பாக அவர் மேலும், "1970களில் டிஎன்ஏ தொழில்நுட்பம் வந்தபோது, விஞ்ஞானிகள் அவசரப்பட்டு முன்னேறாமல், முதலில் அதன் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பற்றி விவாதித்தனர். அதேபோல இப்போதும் அடுத்த 6 மாதங்களுக்கு அமைதியாகப் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+