இந்தாண்டே உலக அழிவு தொடங்க போகுது.. பாபா வாங்கா மட்டுமில்லை.. 4 பேரும் சொல்வது ஒரே விஷயம் தான்!

Subscribe to Oneindia Tamil

ஸ்வீடன்: இப்போது உலகில் புவிசார் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே இந்தாண்டே பூமியில் மிகப் பெரிய ஆபத்து சூழ்ந்து வருவதாகவும் இது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் எச்சரிக்கை வந்துள்ளது. அதுவும் ஒருவர், இரண்டு பேர் இல்லை.. மொத்த பேரும் சொல்லி வைத்தார் போல இதே கணிப்பை விட்டுச் சென்றுள்ளனர். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

நமது உலகில் தொடர்ச்சியாக பல்வேறு மாற்றங்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி உருவான போது அது இப்போது இருப்பது போல இல்லை. அதில் பல்வேறு மாற்றங்கள் தொடர்ச்சியாக நடந்ததின் விளைவாகவே பூமி நாம் இப்போது இருப்பது போல இருக்கிறது. பூமி கடந்த காலங்களில் எப்படி மாறியது என்பதைக் கண்டறியத் தொடர்ச்சியாக ஆய்வுகள் நடந்து வருகிறது.

Apocalyptic End Predicted for 2025 Top Psychics Share Shocking Revelations
Photo Credit:

தொடரும் ஆய்வுகள்

கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பதை உணர்ந்தாலே வரும் காலத்தில் என்ன நடக்கும் என்பது தெரிந்துவிடும் என்பதால் இந்த ஆய்வுகள் நடக்கிறது. இப்படி வரும் காலத்தில் என்ன நடக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள ஆய்வாளர்கள் ஒரு பக்கம் தொடர்ச்சியாக ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள். மறுபுறம் வரும் காலத்தில் என்ன நடக்கும் என்பதைக் கணித்துச் சொன்ன சிலரின் கணிப்புகளும் முக்கியத்துவம் பெற்றே வருகிறது.

அப்படி வரும் காலம் குறித்துக் கணித்தவர்களில் முக்கியமானவர்கள் பாபா வாங்கா, நோஸ்ட்ராடாமஸ், அதோஸ் சலோமி மற்றும் நிக்கோலஸ் அவுஜுலா! இதில் விஷயம் என்னவென்றால் இந்த நாலு பேருமே சொல்லி வைத்தார் போல 2025ல் பூமியில் மிக மோசமான சம்பவங்கள் நடக்கும் என்று எச்சரித்துள்ளனர்.

நெருங்கும் பேரழிவு

காலநிலை மாற்றத்தால் பேரழிவு தரும் பூகம்பங்கள் மற்றும் ஐரோப்பாவில் மிகப் பெரிய போர் ஏற்படும்.. இது மனித குலத்தின் வீழ்ச்சியின் தொடக்கமாக இருக்கும் எனப் பாபா வாங்கா கணித்திருந்தார். ஐரோப்பாவில் மிகப் பெரிய போர் வெடிக்கும்.. அதில் பிரிட்டனுக்கும் பங்கு இருக்கும் என்பதைக் கணித்த நோஸ்ட்ராடாமஸ், ஏலியன் தாக்குதல், கொரோனா போன்ற பெருந்தொற்று தாக்கும் அபாயம் ஆகியவற்றையும் கணித்துள்ளார்.

ராணி எலிசபெத்தின் மரணம் போன்ற முக்கியமான நிகழ்வுகளைக் கணித்த அதோஸ் சலோமி கூட இதே போன்ற எச்சரிக்கையைக் கொடுத்திருக்கிறார். மூன்றாம் உலகப் போரின் வாசலில் நாம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மிக மோசமான நிகழ்வுகள் சீக்கிரமே நடக்கத் தொடங்கும் என எச்சரித்துள்ளார். தொழில்நுட்ப வளர்ச்சி போரின் தன்மையையே மொத்தமாக மாற்றிவிட்ட நிலையில், சலோமியின் இந்த கணிப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

நான்கு பேருமே சொல்வது ஒன்றைத் தான்

அதேபோல லண்டனைச் சேர்ந்த நிக்கோலஸ் அவுஜுலாவும் இந்தாண்டு போர் வெடிக்கும் எனக் கணித்துள்ளார். உலகம் இரக்கம் இல்லாத ஒன்றாக மாறிவரும் சூழலில் இந்த ஆண்டு நடுப்பகுதியில் போர் வெடிக்கக்கூடும் என அவர் கூறியிருக்கிறார். மதம் மற்றும் தேசியவாதத்தின் பெயரில் கொடூரமான வன்முறையை நாம் காண்போம் என அவர் எச்சரித்திருக்கிறார்.

உலக அழிவு தொடங்குகிறது?

உலகில் இப்போது மிகவும் நிலையற்ற தன்மை இருக்கும் சூழலில் இந்த எச்சரிக்கைகள் முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு பக்கம் ரஷ்யா உக்ரைன் மோதல், இஸ்ரேல்- ஹமாஸ் போர் என மோதல்கள் தொடர்கிறது. மற்றொரு பக்கம் பல காலமாக நடுநிலை நாடாக இருந்த ஸ்வீடனின் நேட்டோவில் இணைந்துள்ளது. இப்படி உலகம் இரு பிரிவுகளாகப் பிரிந்து வருகிறது.

தொழில்நுட்பமும் போர் முறைகளை எங்கோ எடுத்துச் சென்றுவிட்ட நிலையில், இப்போது 3ம் உலகப் போர் வெடித்தால் அதை நிறுத்துவது கடினம். மேலும், அது பூமியின் முடிவாகக் கூட இருக்கலாம் என நான்கு பேருமே எச்சரித்துள்ளனர். இது தற்போதைய புவிசார் சூழலில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+